முந்திரி மரம் எத்தனை நாட்களில் மகசூல் கொடுக்கும்? எவ்வளவு மகசூல் கொடுக்கும்?

முந்திரி மரம் நடவு செய்து 3-5 வருட வருடங்களில் இரண்டு கிலோவும், 6-1o வருடங்களில் 7 கிலோவும் ,11-15 வருடங்களில் 15 கிலோவும், 16-2o வருடங்களில் 20 கிலோ வரையிலும் மகசூல் கொடுக்கும்.

இந்த வைரஸ் ஆனது பேமிசியா டபாஸி என்ற வெள்ளை ஈ தாக்குதலுக்கு உட்பட்ட பயிர்களில் இருந்து மற்ற பயிர்களுக்கு பரவுகிறது.

எள் சாகுபடி செய்யும்போது என்ன அடி உரம் இடலாம்?

எள் சாகுபடி செய்யும்போது ஏக்கருக்கு 4 பொட்டலம் அசோஸ்பிரில்லம் மற்றும் 4 போட்டலாம் பாஸ்போ பாக்டீரியா பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை 20 கிலோ மணலுடன் கலந்து அடியுரமாக இடலாம்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து இடலாம்.

தென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறையான இடங்களில் என்ன உரம் இடவேண்டும்?

தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் உள்ள ரசாயன உரங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலுரமாக ஆர்கானிக் உரமாக கோகோஸ் உர மருந்து பயன்படுத்த வேண்டும்.

இதனால் நீரை சேமிப்பது மற்றும் குரும்பை உதிர்வதை தடுத்து அதிக அளவு மகசூலைப் பெறலாம்.

நோய் பூச்சிகளை ஆரம்பத்திலேயே எப்படி எளிய முறையில் தடுக்கலாம்?

ஒரு சில நோய்களும், நோய்களும் வெறும் தண்ணீரை நன்றாக தெளிப்பதனால் சரியாகின்றன.

சில பூச்சிகளின் முட்டைகள் வெறும் சுண்ணாம்பு தண்ணீரைத் தெளிப்பதனாலும் , சில பூச்சிகளை சர்க்கரை கரைசலை தெளித்து எறும்புகளை வரவேற்பதாலும் அழிக்கலாம்.

மடி சம்பந்தப்பட்ட குறைபாடுள்ள பசுக்களை எப்படி அறியலாம்?

சில பசுக்கள் கலப்பின பசு வர்க்கமாக இருந்தாலும் பால் மடி குறைபாடுகள் இருந்தால் பண்ணை விட்டு கழிக்க வேண்டும்.

தொய்வான மடி உள்ள பசுக்கள் பால்மடி சமமாக இல்லாமல் ஒருபுறம் பருத்தும், ஒருபுறம் மிகவும் சிறுத்தும் இருக்கும் பசுக்கள் மிகச் சிறிய காம்புகள் மற்றும் தடித்த காம்புகள் கொண்ட பசுக்கள் எப்பொழுதும் சுரந்து காணப்படும் பால் மடி மற்றும் காம்புகளை கொண்ட பசுக்கள் குறைபாடுடைய பசுக்கள் ஆகும்.

இவற்றுக்கு பிறக்கும் கன்றுகளும் அதே வகையான குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories