முலாம்பழம் எப்படி பயிரிடுவது

மண்

செம்மண் மணல் கலந்த செம்மண் வகைகள் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று நான்கு முறை உழுது எக்டருக்கு 50 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு நிலத்தை பண்படுத்த வேண்டும். பிறகு இரண்டு அடி அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் எடுக்கவேண்டும் .வாய்க்காலின் பக்கவாட்டில் 45x45x45 சென்டி மீட்டர் அளவுள்ள குழிகளை ஒரு மீட்டர் இடைவெளியில் தோண்டி மண்புழு அல்லது கலப்பு உரங்களைப் போட்டு மண்ணுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

விதை அளவு

ஒரு எக்டருக்கு மூன்று கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.

விதை நேர்த்தி

விதை நேர்த்தி செய்த விதைகளை குழிகளின் மத்தியில் 3 அல்லது 4 விதைகள் வீதம் 0.6 மீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைப்பதற்கு முன்பு நீர்ப்பாய்ச்சவேண்டும் . மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories