முலாம்பழம் சாகுபடி!

நாற்றங்கால் முறை:

10சென்டி மீட்டர் விட்டம் மற்றும் 15 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பாலித்தீன் கைகளில் தயாரிக்கலாம் அல்லது குழித்தட்டுகளில் உபயோகிக்கலாம். 12 நாட்கள் வயதுடைய நாற்றுகளை விளை நிலங்களில் நடவு செய்யலாம்.

விதைப்பு:

மேட்டுப்பாத்தி ஒற்றை வரிசை முறையில் ஒரு ஹெக்டருக்கு 23 ஆயிரத்து 500 நாற்றுகள் தேவைப்படும் இதனை உற்பத்தி செய்ய 250 குழித்தட்டுகள் தேவைப்படும்.

உரப்பாசனம்:

நீர்ப்பாசனம் செய்யும்போது மேம்படுத்தப்பட்டஅமிர்த கரைசல் மற்றும் பஞ்சகாவியம் கலந்துவிட வேண்டும்.

களை மேலாண்மை:

மண்வெட்டி அல்லது களை கொத்து கொண்டு மூன்று முறை களை எடுக்க வேண்டும்.

நோய்கள்:

நோய்கள், புழு மற்றும் பூச்சிகளின் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழித்து விடவேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் பூச்சி கூடுகளை வெளிக் கொண்டுவர முடியும். வெளிவரும் பூச்சி கூடுகளை பறவைகள் உண்டு விடும்.

ஈக்களின் எண்ணிக்கை வெப்ப காலத்தில் குறைவாகும், மழை காலத்தில் அதிகமாகவும் இருக்கும். அதற்கு தகுந்த விதைப்பு நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

கட்டுப்பாடு:

மீன் உணவு பொறியை வைக்கலாம். ஒரு எக்டருக்கு 50 புள்ளிகள் தேவைப்படும்.

வேப்ப எண்ணையை இலைத் தெளிப்பாக தெளிக்கலாம். வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாம்.

அறுவடை:

காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும் போதும் அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்:
120 நாட்களில் ஒரு ஹெக்டருக்கு 20 டன் பழம் மகசூலாகக் கிடைக்கும்.
நன்மைகள்:

உடல் உஷ்ணத்தைப் போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலும் போக்க வல்லது, வயிற்றுப் போக்கை குணப்படுத்த கூடியதும் முலாம்பழம் நல்ல மணம்,சுவை உடையது.மிகுந்த சத்துக்களை உடையது. இதில் வைட்டமின் ஏ ,இரும்புசத்து, பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories