முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் வருமானம் பெற சில வழிமுறைகள்!

குறைந்த நாட்களில், நிலையான வருவாய் கிடைப்பதால் முள்ளங்கி முக்கிய இடம் பிடிப்பதால், முள்ளங்கி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சாகுபடி (Cultivation)
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கத்தரி, வெங்காயம் வெண்டை உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்கின்றனர்.

இதில் அனைத்து வகை மண்ணிலும் வளரும் தனித்தன்மை கொண்டது முள்ளங்கி. அதனால், இந்த மாவட்டத்தில் பரவலாக முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளே அறுவடை செய்து, கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு பாதிப்பும் ஏற்படுவதில்லை. முள்ளங்கியில் கிழங்குகள் மட்டுமில்லாமல் அதன் இலையும் கீரையாக பயன்படுத்தப்படுகிறது.

கடைப்பிடிக்கவேண்டியவை (Things to follow)
முள்ளங்கி சாகு படியில், விதை நடவு செய்யப்பட்டு வருகிறது. நாற்று நடவு குறைவாகவே மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

வாரத்துக்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சாகுபடியில் களையெடுப்பு கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

நோய் தாக்குதல் (Disease attack)
அசுவினி இலை நோய் தாக்குதலை உரிய மருந்து தெளிப்பதன் வழியாக கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு, 8 டன் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

செலவு (Expenditure)
விதை, நடவு, அறுவடை விற்பனை உள்ளிட்டவற்றுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை செலவு பிடிக்கிறது.

விலை (Price)
நடவு செய்த, 35வது நாட்களில் இருந்து அறுவடைக்கு வருகிறது கிலோ சராசரியாக, ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது முறையான பராமரிப்பை மேற்கொண்டால், சாகுபடியில் நிலையான வருமானத்தை பெறலாம் என்றார்.

தற்போது, உடுமலை வட்டாரத்தில், சொட்டு நீர் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள முள்ளங்கி செடிகளுக்கு, இடையே வளர்ந்து உள்ள களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories