முள்ளங்கி சாகுபடி

 

 

சமவெளிப் பகுதிகளில் செப்டம்பர் மாதம் பயிர் செய்யலாம்.

மண்
அணைத்து வகையான மண்ணிலும் முள்ளங்கியை சாகுபடி செய்யலாம் .அதிக விளைச்சல் பெற இயற்கையான எரு மிகுந்த லேசான மணல் சார்ந்த கார அமில அளவு 5.5 புள்ளி 6.5 கொண்ட வண்டல் நிலம் மிகவும் உகந்தது.

நிலம் தயாரித்தல்
நன்கு மக்கிய தொழு உரம் எக்டருக்கு 25 டன் கடைசி உழவின்போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுகளில் நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதை அளவு
ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.

விதைத்தல்
தயார் செய்துள்ள பாத்திகளில் வரிசைக்கு வரிசை 30 சென்டி மீட்டர் இடைவெளியிலும் செடிக்குச் செடி 10 சென்டி மீட்டர் இடைவெளியிலும் 1.25 சென்டிமீட்டர் ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்
நீர்பாசனம் விதைப்பதற்கு முன்பு மூன்றாம் நாளும் அவசியம் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரம் காய்ந்து விடாமல் தேவைப்படும்போது நீர்ப்பாய்ச்சவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories