மூலிகை பயிரான நித்தியகல்யாணி சாகுபடி!

நித்தியகல்யாணி தாவரத்தின் அறிவியல் பெயர் கேத்தரன் தாஸ் ரோசியஸ் அப்போசைனேசியே என்ற தாவர குடும்பத்தையும் சார்ந்ததாகும் நித்திய கல்யாணி மருத்துவ பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தாவரத்தின் சாகுபடி முறையை காண்போம்.

நித்தியகல்யாணி மூன்று வகைகள் உள்ளன வெள்ளை ஊதா மற்றும் நிர்மல் ஆகும். நித்தியகல்யாணிப்பூ வகையில் உள்ள வெள்ளைப் பூவில் நிர்மல் மற்றும் தவல் என்ற இரு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன .

இந்த சாகுபடியில் அனைத்து மண் வகைகளுக்கும் மற்றும் வெப்பமண்டல பகுதிகளுக்கு ஏற்றதாகும் ஆண்டு மழை அளவு 3 சென்டிமீட்டர் இருந்தால் போதுமானது மேலும் மானாவாரி பயிராகவும் பயிரிடப்படுகிறது நித்தியகல்யாணி நேரடி விதைப்பு அல்லது நாற்று நடவு செய்யப்படுகிறது.

நேரடி விதைப்புக்கு 2.5 கி கிவிதை தேவைப்படுகிறது மற்றும் நாற்று நடவிற்கு ஏக்கருக்கு o.5 கி கி தேவைப்படுகிறது மேலும் 45 முதல் 60 நாட்கள் வயதுடைய நாற்றுகளை 45 x 20 சென்டி மீட்டர் இடைவெளியில் ஜூன் மற்றும் ஜூலை அல்லது செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடவு செய்யப்படுகிறது.

நிலத்தை சீர் செய்ய இயற்கை உரம் மக்கிய உரம் மற்றும் வேப்பம் கொட்டை தூள் போட்டு நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் பஞ்சகாவியம் அமிர்தக் கரைசல் தெளித்து விடலாம் அதிக பூக்களை பெறுவதற்கு தேமோர் கரைசல் தெளித்து விடலாம் விதைப்பு செய்த பிறகு அல்லது நடவு செய்த 90வது நாளில் முதல் முறை களை எடுத்தல் மற்றும் 60-ம் நாளில் இரண்டாவது களை எடுத்தல் வேண்டும்.

வேர்கள் ஒரு வருடத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும் இரண்டே இல்லை வரிகளில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு விதைப்பு 9வது மாதங்களில் இரண்டாவது விதைப்பு எடுக்க முடியும் இதன் பின்பும்மண்ணை உழுது வேர்களை அறுவடை செய்ய வேண்டும் கிழங்குகளை சேதமில்லாமல் சேகரிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories