வல்லாரைக்கீரை எப்படி பயன்படுத்துவது எப்படி பயிரிடுவது?

 

ரகங்கள்

சமவெளிவல்லாரை- வெளிர் பச்சை நிற இலைகளுடன் கூடிய மலைப்பகுதி கரும்பச்சை இலைகளையுடையது.

பருவம்

அக்டோபர் மாதம் சாகுபடி செய்யும் சிறந்த பருவமாகும். மிதமான காலநிலை மற்றும் நிறைந்த நிழலானபகுதிகளில் நன்கு வளரும் 50% நிழலில் அதிகமாக வளரும் மற்றும் மகசூல் அதிகமாக கிடைக்கும்.

மண்

ஈரப்பதமான சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளை சுற்றி நன்கு வளரும் அமில மற்றும் உவர் மண்ணில் வளரும் தன்மை கொண்டவை ஈரத்தன்மைதன்மை உள்ள அங்கக தன்மை கொண்டவை. களிமண்ணில் நன்கு வளரும்.

விதை அளவு

கணுக்கள் கொண்ட 2 தண்டு துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் எண்ணிக்கை தாவரங்கள் தேவைப்படும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு நன்கு வளரும் வரை நான்கு நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு பயிரின் தேவைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஒரு எக்டருக்கு தழைச்சத்து ஒரு கிலோ தழைச்சத்து 60 கிலோ கிராம் மற்றும் சாம்பல் சத்து 20 கிலோ கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும் இதை இரண்டாக பிரித்து இரு முறை கொடுக்கலாம்.

பயன்கள்

இந்தக் கீரையில் இரும்புச்சத்து சுண்ணாம்புச்சத்து உயிர்ச்சத்து ஏ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மூளை நரம்புகள் வலுப்பெறும்.

வீக்கம் கட்டிகள் மறைய வல்லாரைக்கீரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வல்லாரைக் கீரையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண் குடல் நோய் வாய்ப்புண் வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

உடல்சோர்வு தோல் நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories