வாசனை பயிரான வெட்டிவேரின் பொருளாதாரப் பகுதி வேர்ப் பகுதியாகும் வெட்டி வேரில் இருந்து பல வகையான அழகு சாதனங்கள் மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
அத்தகைய வெட்டிவேரின் சாகுபடி முறைகளைப் பற்றி இங்கு காணலாம்.
வகைகள்:
பொதுவாக இரண்டு வகைகளாகும் .அதாவது நாற்று வகை நாற்று இல்லாத வகை ஆகும் .வட இந்தியாவில் நாற்று வகை வளர்கிறது மற்றும் தென்னிந்தியாவில் நாற்று இல்லாத வகை பரவலாக வளருகின்றது.
கலப்பு 8, சுகந்தா, ஓடிவி – 3 ஆகியவை வெட்டிவேர் சாகுபடிக்கு மிகவும் ஏற்ற ரகங்கள் ஆகும்.
மண்:
சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுடைய கரிசல்மண் கார அமிலத்தன்மை 6 – 8 கொண்டிருக்கவேண்டும். மற்றும் வேறு போகும் அடர்த்தியாகவும் போதுமான எண்ணெய் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
நடவு செய்தல்
வெட்டிவேரின் பயிரிடும் விவசாயிகள் மூன்று விதமான நடவு முறைகளை பின்பற்றலாம்.
அவைகள்
அமைப்பு 1 : 30 – 38 மீட்டர் உயரம் 48 சென்டிமீட்டர் அகலம் கொண்ட வரப்புகளை அமைத்து வெட்டிவேர் துண்டுகளை 23 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
அமைப்பு 2: 30 சென்டிமீட்டர் உயரம் அறுபது சென்டிமீட்டர் அகலம் கொண்ட படுக்கைகள் அமைத்து முனையிலிருந்து 45 சென்டி மீட்டர் தள்ளி நடவு செய்ய வேண்டும். இரண்டு வரிசைகளுக்கு இடையில் 22.5 சென்டிமீட்டர் இடைவெளி விட வேண்டும்.
அமைப்பு 3: 45 சென்டிமீட்டர் உயரம் மற்றும் 60 சென்டிமீட்டர் அகலம் கொண்ட படுக்கைகள் அமைத்து முனையிலிருந்து 30 சென்டி மீட்டர் தள்ளி இரண்டு பக்கங்களிலும் 15 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும் .இரண்டு வரிசைகளுக்கு ஆன இடைவெளி 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும்.
இனப்பெருக்கம்:
வெட்டிவேர் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. நீராற்றல் வீணா வதை தடுப்பதற்காக பயிரின் மேல் உள்ள கிளைகளை கவாத்து செய்து எடுக்கப்பட்ட துண்டுகள் இனப்பெருக்கம் செய்ய பயன்படுகிறது.
இவை அதிக முளைப்புத் திறன் கொண்டவையாக இருக்கும். இந்த துண்டுகளை 5 முதல் 8 சென்டி மீட்டர் ஆழம் உள்ள குழிகளில் நடப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் துண்டுகள் ஒரு குழிக்கு நடப்படுகிறது ( அமைப்பு 2 )
மேலும் தென்னிந்திய சூழலில் அதிக எண்ணெய் மகசூல்கிடைக்க ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம்.