வாழையில் ரஸ்தாளி ரகத்தின் இயல்புகள் பற்றி கூறுக?

கண் வல்லி கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் பெற என்ன செய்ய வேண்டும்?

கண்வல்லி கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் பெற அயல் மகரந்தசேர்க்கை செய்ய வேண்டும்.

இதற்காக பூக்கள் மகரந்தம் சமயத்தில் 10 முதல் 15 சென்டிமீட்டர் நீளமான மெல்லிய குச்சியை எடுத்து அவற்றின் நுனியில் சிறிது பஞ்சைக் சுற்றி தொடும் போது மகரந்தத்தூள் பஞ்சின் மீது ஒட்டிக் கொள்ளும்.

இதனைக் கொடிகளில் உள்ள மற்ற பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தலாம். தினமும் காலை நேரம் அதாவது 8 மணி முதல் 11 மணி வரை அயல் மகரந்த சேர்க்கை செய்து அதிக அளவில் கா ய் மகசூலை பெறலாம்.

செடிகளில் கொசு போன்ற பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்?

300 மில்லி வேப்ப எண்ணெய், 300 மில்லி புங்கன் எண்ணெய் ,150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலை பூச்சித்தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளித்து கட்டுப்படுத்தலாம்.

வாழையில் ரஸ்தாளி ரகத்தின் இயல்புகள் பற்றி கூறுக?

ரஸ்தாளி ரக வாழையின் வயது 14 முதல் 15 மாதங்கள் ஆகும். இதன் வாழைத் தாரில் 7 முதல் 9 வரைதார்களும் 80 முதல் 150 காய்களும் இருக்கும். தரையின் எடை 15 முதல் 20 கிலோ வரை இருக்கும்.

இந்த ர கம்வா டல் நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறது. மேலும் இலைப்புள்ளி நோய் மற்றும் நூற் பு ழுவின் சேதம் அதிகமாக இருக்கும்.

வெட்டிவேர் சாகுபடியில் பயிர் பெருக்கம் எப்படி செய்யலாம்?

வெட்டிவேரின் பக்கதூர்கள் கொண்டு பயிர் பெருக்கம் செய்யலாம் .முதல் சாகுபடிக்கு மட்டுமே மாற்றங்கள் தேவை. பிறகு அதன் தண்டுகளை நாற்றுகளாக நடலாம்.

25 முதல்30 சென்டிமீட்டர் வரை உள்ளதூர்களை நடவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தூர்களை நல்ல வளமான குத்து களில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும். ஒரு ரிக்டரில் நடவு செய்வதற்கு 5000 முதல் 6000 தூர்கள் வரை தேவைப்படும்.

கன்று வளர்ப்பில் எவ்வளவு நாட்களுக்கு தாயிடம் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும்?

கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 5 முதல் 6 லிட்டர் வரை பால் அளிக்கலாம். நான்கு மாத வயது வரை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும்.

பிறகு பசுந்தீவனத்தை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். 6 மாத வயதிற்குப் பிறகு கி டே ரி மற்றும் காளைக் கன்றுகளை தனியாக கொட்டகைகளில் பராமரிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories