விதைக்குச்சிகள் மூலம் மல்பெரி நாற்று உற்பத்தி பற்றி தகவல்கள்!

விதைக்குச்சிகள் மூலம் மல்பெரி இளம் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகள் லாபம் ஈட்டலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பயிற்சி (Training)
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம் மல்பெரி இளம் நாற்று உற்பத்தி பற்றிய புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தி பற்றிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு இணையவழி பயிற்சி நடைபெற்றது.

40 விவசாயிகள் (40 farmers)
இப்பயிற்சியில் தேவகோட்டை, கண்ணங்குடி, காளையார்கோவில் மற்றும் சாக்கோட்டை வட்டாரங்களிலிருந்து வட்டாரத்திற்கு 10 விவசாயிகள் வீதம் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

புதிய தொழில்நுட்பங்கள் (New technologies)
இதில் தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் நெப்போலியன் தலைமை தாங்கி பயிற்சியின் முக்கியத்துவம்பற்றி எடுத்துரைத்தார். அதேபோல், பட்டு வளர்ச்சித்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் இளநிலை ஆய்வாளர் சேக் ஆசிப் கலந்து கொண்டு மல்பெரி இளம் நாற்று உற்பத்தி பற்றிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் இரகங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

அப்போது மல்பெரி நாற்றுகளை விதைக்குச்சிகள் மூலமே உற்பத்தி செய்வதும் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

நிலம் (Land)
ஒரு ஹெக்டர் மல்பெரி தோட்டம் அமைக்க தேவையான நாற்று உற்பத்திகள் செய்ய 20 சென்ட் நிலம் தேவைப்படுகிறது.

விதைக்குச்சிகள் தேர்வு (Selection of seedlings)
பூச்சி நோய் தாக்காத ஆறு முதல் எட்டு முதிர்வுடைய செடியிலிருந்து விதைக்குச்சிகள் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3-4 பருக்கள் உடைய சிறு விதைக்குச்சிகளாகவும் 15-20 செ.மீ நீளம் உள்ளதாகவும் வெட்ட வேண்டும் மற்றும்

வெட்டும் போது ஒவ்வொரு விதைக் குச்சியின் மேல், நுனியில் நேராகவும் அடிப்பகுதியில் சாய்வாக இருக்கும்படி வெட்ட வேண்டும் இதில்

நடுதல் (Planting)
பட்டை விதைகுச்சிகள் வேர்விடும் திறனை அதிகரிக்க ஒரு கிலோ அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு அதில் விதைக்குச்சிகள் அடிபாகம் நனையுமாறு 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் நட வேண்டும்.

நீர் பாய்ச்சுதல் (Water flow)
நாற்றாங்கால்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். குச்சிகளை நட்டது முதல் 45 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கவாத்து
மல்பெரி செடியை சாதரணமாக 90-90 செமீ அளவில் நடவு மேற்கொள்ளலாம். இறவை பயிருக்கு ஒரு ஆண்டிற்கு 300:120:120 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்துகள் உரத்தை ஐந்து தவணைகளில் ஒவ்வொரு கவாத்திற்கும் இட வேண்டும்.

உரத்தேவை
தழைச்சத்து நிர்வாகத்தை மிகவும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

அசோஸ்பைரில்லம் போன்ற உயிரி உரங்களை மல்பெரி செடிகளுக்கு ஆண்டிற்கு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் இட்டு இரசாயன உர தேவையை 25 சதவீதம் குறைத்து கொள்ளலாம்.

எக்டர்க்கு 20 கிலோ என்றளவில் இட்டு இரசாயன உர தேவையை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக 10-12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியைப் பராமரிக்க வேண்டும் எனவே

இவ்வாறு செய்து வந்தால் 12-15 வருடங்கள், மகசூல் குறைவின்றித் தோட்டத்தை பராமரிக்க முடியும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories