வெங்காயத்துடன் ஊடுபயிராக என்ன பயிர் செய்யலாம்?

வெங்காயத்தில் ஊடுபயிராக அதாவது வரப்பு ஓரங்களில் வயலைச் சுற்றி ஆமணக்கு விதைப்பதன் மூலம் வெட்டு புழுக்களின் முடடைகள் மற்றும் வெட்டுப்புழுக்கள் சேகரித்து அழிக்கலாம்.

வெங்காயம் நடும் பொழுது வரப்பை சுற்றிலும் சூரியகாந்தியை நடவு செய்வதால் வெங்காய பயிரை இலை பேன்கள் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
செடிகளில் வாடல் மற்றும் துரு நோய் எவ்வாறு உண்டாகிறது?

வாடல் நோயினால் பூசணம் மற்றும் பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு செடிகள் திடிரென்று வாடதொடங்கிய சில தினங்களில் முழுவதும் காய்ந்து மடிந்துவிடும்.

பரவல் பாசனம் என்றால் என்ன?

நிலத்தைச் சுற்றிலும் வரப்புகளை அமைத்து நிலப்பரப்பினை சமதளத்தில் வாய்க்காலின் மூலம் நீரை ஒரு வாய் மடை வழியாக நிலத்திற்கு பாய்ச்சி நிலம் முழுவதும் பரவ செய்யும் முறைக்கு பரவல் பாசனம் என்று பெயர்.

காராமணி பயிரிட சிறந்த ரகம் என்ன?

காராமணி பயிரிட கோ 6 பையூர் 1 பூசா 152 கோ 7 ரகங்கள் சிறந்தவை இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

காராமணியில் கோ 6 பயிரை 55 நாட்களில் அறுவடை செய்யலாம் இதனால் அனைத்து பருவங்களிலும் ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் பெறலாம்

கால்நடைகளுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன இயற்கை மருந்து கொடுக்கலாம்?

பூண்டு சின்ன வெங்காயம் தலா 2 கொத்தமல்லி விதை மிளகு சீரகம் ஆகியவற்றை தலா 10கிராம் வேப்பிலை துளசி திருநீற்றுப்பச்சை இலை தலா ஒரு கையளவு வெற்றியடைந்து பிரியாணி இலை பொடி மஞ்சள் பொடி தலா 10 கிராம் நிலவேம்பு இலை பொடி 20 கிராம் வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம் மூளையில் ஜீரகம் மிளகு மற்றும் கொத்தமல்லி விதையை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும் அதனுடன் அனைத்து பொருட்களையும் பச்சையாக அரைத்துக்கொள்ளவும் அரைத்ததை சிறிய உருண்டைகளாக உருட்டி வாய்வழியாக காலை மற்றும் மாலையில் கொடுக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories