வெள்ளைப் பூண்டில் 101 சிங்கப்பூர் ரெட் மதராசி ஆர்வி ராஜேஷ் காடி மற்றும் சிங்கப்பூர் ஆகிய ரகங்கள் உள்ளன.
பூண்டு சாகுபடி செய்ய ஜூன் ஜூலை மற்றும் அக்டோபர் நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றதாகும் களிமண் கலந்த வண்டல் மண் சாகுபடிக்கு உகந்தது இந்த காலநிலை சாகுபடி செய்ய உகந்தது ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சி நல்ல சூரிய ஒளி என வேறுபட்ட தட்பவெட்ப நிலையில் நன்றாக வளரும் வளமான வடிகால் வசதி கொண்ட மன்அவசியம்.
நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழுது தொழு உரம் மண்புழு உரம் வேப்பம்புண்ணாக்கு போன்ற புறக் கலவைகளை அடியுரமாக நிலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் பின்னர் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
ஒரு மீட்டர் அகலம் 15 சென்டிமீட்டர் உயரம் தேவையான அளவு நீளமும் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து பாத்தி அமைத்து விதைகளை 15 x 10 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும் அதன்பிறகு உணர்ச்சிகளை 7 முதல் 8 நாட்கள் ஒரு முறை முதிர்ச்சி அடையும்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும் விதைத்த ஒரு வாரம் கழித்து களை எடுக்க வேண்டும் அல்லது ஒரு மாத இடைவெளியில் களை எடுக்கலாம்.
கற்பூர கரைசல் மற்றும் பஞ்சகாவிய அவ்வப்போது தெளித்தால் செடிகள் நன்றாக வளர்வதுடன் சில நோய்த் தாக்குதலும் இருக்காது மேலும் தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் மற்றும் அமிர்த கரைசல் தெளித்து விடலாம்.
நடவு செய்த120 முதல் 130 நாட்களில் அதாவது இலைகள் மஞ்சள் நிறமாக மாற தொடங்கியபின் அறுவடை செய்ய வேண்டும்.