75 சென்டிலிருந்து 4500 கிலோ வெங்காயம் மகசூல் எடுக்கலாம். எப்படி?…

வழக்கமான முறையில் வெங்காயம் போடும்போது அதிகளவில் புண்ணாக்கு மேலுரமாக ஊட்டம் கொடுக்கணும். களை எடுப்பு செலவும் அதிகமாகும். ஆனால், “இரு படிப்பாத்தி” அமைக்கும்போது செலவு குறைவதோடு வேலையும் குறைவு. அதிக மகசூலும் எடுக்கலாம்.

உழவு:

தேர்வு செய்த நிலத்தில் முக்கால் அடி ஆழத்திற்கு உழவு ஓட்ட வேண்டும். 20 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் தெளிப்புநீர் குழாயைப் பதிக்க வேண்டும்.

தெளிப்புநீர் திறப்பான்:

தெளிப்புநீர் திறப்பான் 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். 20 அடி தூரத்திற்கு ஒரு திறப்பான் அமைத்தால் போதும். 4 அடி அகலம், 25 அடி நீளம், முக்கால் அடி ஆழத்திற்கு மண்ணைப் பறித்து இருபுறமும் ஒதுக்கிவைக்க வேண்டும். குழியின் உள்ளே கடப்பாறையால் குத்தி மண்ணைக்கிளற வேண்டும்.

தொழு உரம்:

பின்னர் குழிக்குள் பாதி உயரத்திற்கு கம்பஞ்சக்கை, எள்ளு சக்கை, மக்காச்சோள சக்கை மற்றும் இலை தழைகள் என அனைத்தையும் இட்டு அதன்மீது தொழு உரத்தையும் போட்டு நிரப்ப வேண்டும். அதன்பிறகு மேல் மண்ணைப் பரப்பவேண்டும். இப்போது தரையிலிருந்து முக்கால் அடி உயரத்திற்கு மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டிருக்கும். இது போல 2 அடி இடைவெளியில் வரிசையாக பாத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

விதைப்பு:

பாத்திகளில் சணப்பு, அவுரி, கம்பு, சோளம், எள், பச்சைப் பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பல்தானிய விதைகளை சம விகிதத்தில் கலந்து விதைக்க வேண்டும். 75 சென்ட நிலத்துக்கும் சேர்த்து மொத்தமாக 15 கிலோ விதை தேவைப்படும்.

அனைத்துப் பாத்திகளுக்கும் பொதுவாக 10 அடி இடைவெளிக்கு ஒருவிதை வீதம் ஆமணக்கு விதையை ஊன்ற வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒருமுறை 7 லிட்டர் அமுதக்கரைசலை 70 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியின்மீது தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இரண்டு மாதங்களில் பல தானியப்பயிர்கள் சுமார் 4 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும். ஆமணக்குச் செடியை தொந்தரவு செய்யாமல் பலதானியப் பயிர்களை மட்டும் வேரோடு பிடுங்கி, பாத்தி முழுவதும் பரப்ப வேண்டும்.

அதன்மீது கம்பு, எள், மக்காச்சோளச் சக்கைளைப் போட்டு மூடாக்கு அமைத்து அரை அடி இடை வெளிக்கு ஒரு விதை வெங்காயம் என்ற கணக்கில் ஊன்ற வேண்டும். மூடாக்கின்மீது அழுத்திப் பதியுமாறு ஊன்றினால் போதுமானது.

அமுதகரைசல்:

பலதானியத்துக்கு தெளித்தது போலவே அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த ஒரு மாதத்துக்குள் களைகள் முளைத்தால் அவைகளைக் கைகளால் நீக்க வேண்டும். நடவு செய்த 70ம் நாளுக்கு மேல் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.

மகசூல்:

மகசூல் 75 சென்டிலிருந்து 4500 கிலோ வெங்காயம் கிடைக்கும். செலவு போக நிகர லாபமாக ரூ.65 ஆயிரம் கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories