சுரக்காய் சாகுபடி சாதனை படைத்த பெண்ணின் அனுபவம்

சுரக்காய் சாகுபடி சாதனை படைத்த பெண்ணின் அனுபவம்
வீரிய ஒட்டு ரகம் சுரக்காய், பந்தல் முறை சாகுபடிக்கு செய்தேன் .; காய்கள் நீள் உருளை வடிவமும் குறுகிய கழுத்து இல்லாத ரகமாகும். இதனை; தைப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம்
சுரக்காய் சாகுபடி செய்ய பந்தல் முறை மிகவும் நல்லது. சுரக்காய்கள் சேதம் இல்லாமலும், காயின் அனைத்து பகுதிகளும் ஒரே நிறமாக இருக்க பந்தல் முறை சிறந்தது.
ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரம் போட வேண்டும் கட்டி, களைகள் இல்லாமல் இருக்க 5- 6 உழவுகள் போட்டு 8 அடிக்கு 8 அடி பார்கட்டி விதைகளை இரண்டடிக்கு ஒன்றுவீதம் நடவு செய்யனும் பின்பு கொடி நன்கு வளரும் தருணத்தில் பந்தலில் சனல் கயிறு கொண்டு கட்டி விடனும் 45நாட்களில் காய் வர ஆரம்பிக்கும்
ஆரம்பத்தில் சாறுஉறிஞ்சும் பூச்சிகள் தென்படும் அவற்றை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் கட்டி கவர்ந்து அழிக்கலாம் கொடி அதிகமாக ஓடி அடம்பாக இருந்தால் கணு, கணுவிற்கு இடையில் உள்ள இலைகளை எடுத்துவிட வேண்டும் காற்றோட்டம் இருந்தால் அதிகமாக பூ எடுக்கும்
பொதுவா சுரக்காயில் பூச்சி மற்றும் நோய் தாக்கம் குறைவே இருப்பினும் சுரக்காய் கொடிகளை சேதப்படுத்தும் சிவப்பு மூக்கு வண்டுகள். இலைகளை சாப்பிட்டு ஒட்டடைகளை ஏற்படுத்தும் இதனால் மகசூல் பாதிப்பு ஏற்;படும்.
தொடர்ந்து தாவர இலைச்சாறு 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வந்தால் எந்த பூச்சிகளும் தாக்காது.
தண்ணீர் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சும் பொழுது 50 கிலோ கடலை புண்ணாக்கை முதல் நாளே ஊறவைத்து தண்ணீரில் ஊற்றி விடலாம் காய் விரைவாக பெருக்க ஆரம்பிக்கும். அல்லது
காய்கள் அறுவடை செய்வதற்கு முன் 19:19:19 உரத்தை 1 லிட்டர் தண்ணீர்க்கு 5 கிராம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம தெளிக்க ; காய்கள் நல்ல பச்சை நிறம் கிடைக்கும். அதனால சந்தையில் கூடுதல் விலைக்கு விற்;க முடியும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காய் அறுவடை செய்து வயலிலேயே ஒரு காய் 10 ரூபாய்க்கு எடுத்து சென்றுவிடுவார்கள் சுரக்காயில் நல்ல லாபம்தான்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories