சாமை பற்றிய தகவல்கள்

 

சாமையின் சிறுதானியங்களில் ஒன்றாகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர் .சிறுதானிய உணவுப் பொருட்களிலும் நம் உடலுக்கு ஊட்டத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏனெனில் மாவுச் சத்து, புரதம், தாதுக்கள் ,நார்ச்சத்துகள் மற்றும் அதிகளவில் பாஸ்பரஸ் பிற நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன. சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. சாமையில் கலோரி அளவு மிகக் குறைவான அளவில் உள்ளது. ஆனால் ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. புரதம் இருப்பதால் அதிகம் சேர்த்துக் கொண்டாலும் எந்த ஆபத்தும் இல்லை. விதையின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால் அது முளைத்து வர 5 முதல் 7 நாட்கள் மட்டுமே ஆகும். சிறுதானியங்கள் என்றாலே வரட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை.சாமையில் சாதம், இட்லி, இடியாப்பம் ,பொங்கல், தோசை,உப்புமா,புட்டு போன்றவற்றை சமைக்கலாம்.

தாது பொருட்களை உடலில் அதிகரிக்கச் செய்தது உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது, காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும் சிறந்த மருந்து. நீரிழிவு நோய்களுக்கு சிறந்தது சாமையில் தயாரித்த உணவு தான். ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சோகையை தடுக்கிறது. அரிசியைக் காட்டிலும்7 மடங்கு நார்ச்சத்து கொண்ட தானியம் இது. தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நோயற்ற வாழ்வினை பெறலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories