சிறு தானிய சாகுபடியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?
சிறு தானிய சாகுபடியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கதிர் முற்றி அறுவடை செய்யும் போது மழை இருக்கக் கூடாது .ஏனென்றால் தானியங்கள் மழையில் வீணாகி விட வாய்ப்பு உள்ளது.
இதை கவனித்த விதைக்கவேண்டும். மழை இருந்தால் தேவையான முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.
விதை நெல்லை இயற்கை முறையில் எப்படி சேமிக்கலாம்?
விதை நெல்லை வைக்கோல் பிரீ, வைக்கோல் ,சாணம் ஆகியவற்றைக் கொண்டு பந்து போல செய்து அதற்குள் விதை நெல்லை கொட்டி வைக்க வேண்டும்.
இந்த முறையில் விதைநெல் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் உயிர்ப்பு தன்மையோடு அப்படியே இருக்கும். இதை கோட்டை கட்டுதல் என்றும் கூறுவார்கள்.
மிளகு அதிக அளவு காய் பிடிக்க என்ன செய்வது?
பஞ்சகாவியம் தெளிப்பதால் பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் காய்கள் அதிகம் பிடிக்கும்.
காய்க்கும் தருணத்தில் கடலைப் புண்ணாக்கு வைப்பதால் திரட்சியான காய்கள் மற்றும் அதிக மகசூல் கிடைக்கும்.
மணல் நிலத்தை எப்படி வளமானதாக மாற்ற லாம்?
வயலில் தொழு உரம் போடலாம். வண்டல் மண்ணை மணல் நிலத்தில் கொட்டுவதால் தண்ணீர் வைக்கும் தேக்கி வைக்கும் திறன் அதிகரிக்கும்.
சணப்பை ,தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை வயலில் வளர்த்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும். இதனால் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இவற்றை செய்வதன் மூலம் நிலத்தை வளபடுத்தலாம்.
சாஹிவால் மாட்டின் இயல்பு நிலையை பற்றி கூறுக?
சாஹிவால் மாடு என்பது முதன்மையாக பால் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மாட்டு இனம். இந்த மாட்டினம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தினை பூர்வீகமாகக் கொண்டது.
இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது லேசான சிவப்பு நிறத்துடன் காணப்படும்.