ரகங்கள்
கோ-3 கோ-4 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஐப்பசி மற்றும் கார்த்திகை பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
மண்
கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
நிலம் தயாரித்தல்
டிராக்டர் மூலம் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும்.
விதை அளவு
ஒரு எக்டருக்கு 25 முதல் 20 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதை நேர்த்தி
விதைப்பதற்கு முன்பு விதையை 200 கிராம் சூடோமோனாஸ் 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றின் மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைத்தல்
30x 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்கவேண்டும். மானாவாரியாக விதையை தூவவேண்டும். பிறகு தேவைக்கேற்ப பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நீர் நிர்வாகம்
கிடைத்த பிறகு விதைத்த பிறகு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும் .தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.