விதைத்த 18 முதல் 20-ம் நாளில் களை எடுத்தல் அவசியம் .அதனுடன் செடிகளை களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும் .பிறகு நாற்பதாம் நாளில் தேவைப்பட்டால் இன்னொரு முறையும் கலை எடுக்கலாம்
பயிர் பாதுகாப்பு
இந்த பயிரை பொதுவாக பூச்சிகள் நோய்கள் தாக்குவதில்லை. ஆதலால் பயிர் பாதுகாப்பு அவசியமில்லை.
அறுவடை
60ம் நாளில் கதிர் வந்து 65 முதல் 70 நாட்களில் பால்பிடித்து 80 முதல் 85 நாட்களில் முற்றி அறுவடைக்கு தயாராகி விடும் .தானியங்கள் நன்கு முதிர்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 1800 கிலோ தானியமும் 1500 தட்டு விளைச்சலையும் பெறலாம்.