நல்ல மகசூல் தரும் கம்பு மற்றும் உளுந்து ரகம்..டிரை பண்ணி பாருங்கள்..

கம்பு கோ-10 ரகம் இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய ஐந்து ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது.

இறவை சாகுபடிக்கு சித்திரை, மாசிப் பட்டங்கள் ஏற்றவை. மானாவரிக்கு ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் ஏற்றவை. தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்ற பயிர். அடிச்சாம்பல் நோய்க்கு அதிக எதிர்ப்புச் சக்தி கொண்டது.

அதிக அளவு புரதச்சத்து (12.07 சதவிகிதம்) கொண்டது. நெருக்கமான கதிர்கள் மற்றும் திரட்சியான விதைகள் இருக்கும்.

உளுந்து [வம்பன்-8]

65-75 நாட்கள் வயது கொண்டது. ஹெக்டேருக்கு 900 கிலோ மகசூல் கொடுக்கும். வி.பி.என்-6 மற்றும் கோ-6 ரகங்களை விட முறையே 11.94 மற்றும் 13.49 சதவிகிதம் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.

வம்பன்-3, வி.பி.என் – 04-008 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆடி, புரட்டாசி, தை பட்டங்கள் ஏற்றவை. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது.

ஒரே தருணத்தில் பயிர் முழுவதும் முதிர்ச்சியுறும். விதைகள் உதிராது. மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்களை எதிர்க்கும்திறன் கொண்டது.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories