நிலக்கடலை சாகுபடியில் என்னென்ன ஊடுபயிர்களை பயிரிடலாம்

 

 

நிலக்கடலை சாகுபடியில் ஆமணக்குச் செடிகளை வயல் ஓரங்களில் நடவு செய்வதால் அதில் உள்ள புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.

நிலக்கடலை கால் கிலோ கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள் பூச்சி இலைப்பேன் மற்றும் அந்துப்பூச்சிசேதத்தை கட்டுப்படுத்தலாம்.

10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக செய்து பொரி வண்டுகளின் பெருக்கத்தை அளிக்கலாம்.

சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

இயற்கை விவசாயத்தில் விளக்குப்பொறி யின் பங்கு என்ன

பூச்சிகள் ஒளியை நோக்கி செல்லக்கூடியவை இரவில் மின்சார விளக்கை எரியவிட்டு அதன் கீழே அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சில துளிகள் மண்ணை விட்டு இரவு 6 மணி முதல் 8 மணி வரை வைக்க வேண்டும் .பூச்சிகள் இந்த விளக்கு ஒளியில் கவரப்பட்டு தண்ணீரில் விழுந்து விடுகின்றது.

இரவு எட்டு மணிக்கு மேல் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் .இதனால் எட்டு மணிக்கு மேல் விளக்கை அணைத்து விட வேண்டும் .இல்லையேல் நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடும்.

பசுக்களுக்கு கருப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும் போது நாம் மேற்கொள்ளவேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன

முதலில் வெளி தள்ளப்பட்ட கருப்பை உறுப்பினை ஒரு சுத்தமான கீரை ஈர துணி கொண்டு மூட வேண்டும்.

இத்தகைய பசுக்களை தரையில் படுக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .அப்படி இயலாத போது பசுக்களுக்கு முறையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

வெளித் தள்ளப்பட்ட கருப்பையும் உறுப்பினரும் ஆசன துவாரத்தின் அளவிற்கு உயர்த்தி விடுவதன் மூலம் இதர பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கால்நடை மருத்துவரின் உதவியுடன் வெளித் தள்ளப்பட்டால் கருப்பை உறுப்பின் சரி செய்திட வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories