பட்டாணி பயிர் இடுவது எப்படி?

 

ரகங்கள்
அலாஸ்கா லின்கெடின், ப்ளூ பூண்ட, போனி வில்லி, ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

பிப்ரவரி மார்ச் அக்டோபர் நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்ற பருவமாகும்.

மண்

செம்மண் பூமியிலும் களிமண்ணில் வளரும். மேலும் இதற்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு தடவை மடக்கி உழவேண்டும் .கடைசி உழவில் 20 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். பிறகு 40 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதை

எக்டருக்கு 100 கிலோ விதை போதுமானது.

விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு 2 கிலோ பாஸ்போபாக்டீரியா மண்ணுடன் கலக்க வேண்டும்.

விதைத்தல்

பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 சென்டிமீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும் .விதைக்கு விதை பத்து சென்டிமீட்டர் இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு மூன்று நாள் கழித்து உயிர்த் தண்ணீர் விடவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

ஒரு எக்டருக்கு தழைச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 20 கிலோ, கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30வது நாளில் 60 கிலோ தழைச்சத்து உரத்தை மேலுரமாக இடவேண்டு.ம்

பயன்கள்

அதிக நார்ச்சத்தும் புரோட்டீன் சத்தும் நிறைந்துள்ள பச்சை பட்டாணிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம்.

பச்சைப்பட்டாணி உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைத்து இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புசத்தை அதிகரிக்கும்.

பச்சைப் பட்டாணி ரத்த புற்று,ஆசனவாய் புற்று, போன்ற எல்லா புற்றுநோய்களையும் வராமல் தடுக்க உதவுகிறது.

விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்த பாதுகாக்கிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories