அசுவினி தாக்குதல்
இமிடேகுலோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்
கூட்டு புழு தாக்குதல்
எண்டோசல்பான் அல்லது குளோர்பைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும் பச்சைக் காய்ப் புழு தாக்குதல் காணப்பட்டாலும் இதே மருந்து பயன்படுத்த வேண்டும்
சாறு உறிஞ்சும் பூச்சி
சாறு உறிஞ்சும் பூச்சி மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்
அறுவடை
நன்கு முற்றிய காய்ந்த காய்களை பறித்து தானியமாக பயன்படுத்தலாம். பச்சைக் காய்களை பறித்து காய்கறியாக பயன்படுத்தலாம்
மகசூல்
ஏக்கருக்கு தோராயமாக 1800 கிலோ மகசூல் கிடைக்கும்.