தினமும் பகலில் 20 முறையும் தொட்டியைகலக்கிவிட வேண்டும் இப்படி செய்வதால் தொட்டி முழுவதும் ஒரே சீராக வெப்பம் இருக்கும். தினமும் வெயில் வருவதற்குள் பாசியினை அறுவடை செய்ய வேண்டும் .நமது கைகளால் நீரை தொடக்கூடாது ஏனெனில் நமது கைகளில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் இருக்கும். அதனால் பாசி வளர்ப்பு பாதிக்கும். சுத்தமான குச்சியை கொண்டு தொட்டியை கலக்கி விட வேண்டும்.
அறுவடை
தினமும் காலை 6 மணி முதல் 8 மணிக்குள் பாசியை அறுவடை செய்ய வேண்டும் .வெயில் சூடு அதிகமாக அதிகமாக பாசி அறுவடை அளவு குறையும்.தொட்டியில் இருக்கும் பாசி பாசி அள்ளும் குச்சியால் இதற்கென்று தயாரிக்கப்பட்ட இரட்டை ஜடை மீது ஊற்ற வேண்டும் .மேற்புறம் உள்ள சல்லடையில் தூசிகள் படிந்துவிடும் அடிப்படையில் பச்சை நிறப் பாசி அங்கு தங்கிவிடும்.