விதைப்புக்கு தரமான நாட்டு விதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பு செய்ய வேண்டும். மேலும் இந்த சாகுபடியில் கிடைத்த விதைகளை அடுத்த சாகுபடிக்கு சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கால்நடை உரங்கள்
நிலத்தில் உழ வு மேற்கொள்ளும் பொழுது அடியுரமாக ஆடு மற்றும் மாட்டு எரு இட்டு கடைசி உழவு செய்ய வேண்டும். அதற்கு எருவை வெளியில் வாங்கக் கூடாது. நாமே ஒரு ஏக்கருக்கு ஒரு நாட்டுமாடு வீதம் வளர்த்து வந்தால் போதுமானதாகும்.
அந்த நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் எருவை பயன்படுத்துவதால் விவசாய நிலமானது பொன் விளையும் பூமியாக மாறிவிடும்.
அதுமட்டுமல்ல நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பால் மற்றும் கழிவு பொருட்கள் தயாரிக்கப்படும் இயற்கை உரமான பஞ்சகாவ்யா அமிர்தகரைசல் மூலிகை பூச்சி விரட்டி தசாகவியம் போன்றவற்றை பயன்படுத்துவதால் நிலத்தை மட்டுமல்ல பயிரையும் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும்.