உயிர்வேலி மரங்கள்

 

கிளுவை முள், கள்ளிச்செடி பனைமரம், மெடிசின் கொசு பூவரசு, கொடுக்காப்புளி, இலந்தை முள், சவுக்கு, காகிதப்பூ, பரம்பை முள், கலாக்காய் மரம், சீயக்காய் மரம்.

போன்ற உயிர்வேலி மரங்கள் பல்லு உயிரிகளின் விருப்பமாகவும் அதற்குத் தேவையான வாழ்விடமாகவும் அமைகிறது.

உயிர் வேலி நிலத்தை சுற்றி இருக்கும் போது பாம்பு .,தேள் ,.பூரான் போன்ற அஞ்சக்கூடிய உயிரினங்கள் அனைத்தும் நிலத்திற்குள் தங்காமல் வெளியில் தங்கி பாதுகாப்பு வளையமாக செயல்படும். இதனால் முதல் நிழல்உருவாகும்.

மயில்கள் , ஆந்தை, குருவி ,கரிச்சான் போன்ற பறவை இனங்கள் உயிர் வேலிகளில் கூடுகட்டி தங்கி சிறு சரணாலயம் செயல்பட வழிவகுக்கும்.

மழைக்காலத்திற்கு முன்னர் நிலத்தின் எல்லை பகுதிகள் முழுவதும் உயிர்வேலி வருவதற்கு சிறிது இடம் ஒதுக்கி உயிர் வேலி அமைக வேண்டும். மண் அரிமானம் தடுக்கப்பட்டு பயிர்களுக்கு பாதுகாப்பு அரணாக அமைந்துவிடும்.

ஆண்டிற்கு ஒருமுறை செடிகளை கவாத்து செய்து புதர் போல இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிலவகை உயிர் வேலிகள் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரக்கூடிய வகையில் தேனீ வளர்ப்புக்கு வழிவகுக்கும்,

உயிர் வேலி பயிர்கள் சில கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

இவ்வளவு நன்மை தரும் உயிர்வேலிநாமும் நம் வயல்களில் அமைத்து மண்ணைமேம்படுத்தலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories