செலவில்லாத தொழில் நுட்பங்கள்

ஆமணக்கு

ஆமணக்கு பூச்சிகளுக்கு பிடித்தது என்றும் கூறலாம். எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியை தான் நாடும். ஆமணக்குச் செடிகளை வயலில் ஓரத்தில் நடவு செய்யலாம். எண்ணிக்கை குறைவாகவே நடவு செய்ய வேண்டும்.. ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து தீமை செய்யும் பூச்சிகளை கண்டால் பூச்சிகளை சேகரித்து அழித்துவிடவேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது. நெருக்கமாகவும் இருக்கக்கூடாது .வயலின் நடுவிலும் நடக்கூடாது.

தட்டைப்பயிர்

வரப்பு ஓரங்களில் அல்லது ஊடு பயிராக நடவு செய்யலாம். இவை அஸ்வினி பூச்சிகள் வளர்வதற்கு ஏற்ற செடியாகும். அஸ்வினி பூச்சிகள் இந்த செடியை நோக்கி வந்தவுடன் அதை உண்ண பொறி வண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வந்து சேரும்.

மக்காச்சோளம்

மக்காச்சோளத்தில் இரை விழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும் .இதை வரப்பை சுற்றியோ அல்லது ஊடு பயிராக பயிர் செய்யும் போது நிறைய இறை விழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு. அவை தீங்கு செய்யும் பூச்சிகளை அழிக்கின்றன .மேலும் மக்காச்சோளம் பறவைகள் உட்காருவதற்கு உதவியாக இருக்கும். பூச்சி விழுங்கி பறவைகள் இதில் அமர்ந்து பயிரைத் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories