கரையான்கள் 100 அடி ஆழம் வரை பூமியில் துளையிட்டு செல்லும் திறன் கொண்டது.
அந்தத் துளையின் வழியே அது ஈர மண்ணையும் நீரையும் பூமியின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அதுமட்டுமல்ல அந்த ஆழம் வரை காற்றும் செல்வதால் காற்றில் உள்ள 80 சதவீதம் தழைச்சத்து நுண்ணுயிரிகள் மூலம் பூமிக்கு வந்தது சேர்கிறது.
தோட்டத்தில் காய்ந்த தழை மரக் குச்சிகளை மரங்களையும் அரித்து சாப்பிடுகிறது . மண் புழுக்களை விடகரையான்கள் விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது. கரையான்காய்ந்த எல்லா பொருட்களின் மக்கச் செய்து விடுகிறது. மேல்மட்டத்தில் காய்ந்து கிடக்கும் சருகுகளை கரையான்கள் சாப்பிட வரும் சமயம் அடிமட்டத்தில் உள்ள நீரையும் மண்ணில் கொண்டு சேர்த்துக் சேர்த்துவிடுகிறது.
நன்கு மழை பெய்யும்சமயம் அந்த துளைகளில் நீரில் இறங்கி நிலத்தடியில் நீர் சேருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது .நிலத்தடி நீர்மட்டத்தை தேக்கிவைக்கப்படுவதால் அருகில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்கிறது .இப்படி கரையான்கள் ஏராளமான பலன்கள் உண்டாகிறது.