விவசாயிகள் தினசரி வருமானம் பெற

விவசாயிகள் தினசரி வருமானம் பெற 
அன்புள்ள விவசாயிகளே கீரை வகைகள் சாகுபடி செய்து இயற்கை முறையில் விற்பனை செய்தால் நல்ல லாபம் பெறலாம்.
ஒரு ஏக்கருக்கு 5 டன் அளவிற்கு தொழுவுரத்தை வயலில் பரப்பிவிட்டு உழவு செய்ய வேண்டும். அதன்பிறகு பார்கட்டி பாத்திகள் போடவேண்டும்.
கீரை விதைகள் பூ மார்கெட் இருக்கு இடத்தில் கிடைக்கும். அல்லது விதை விற்பனை செய்யும் கடைகளில் வாங்கி அவற்றுடன் தேவைக்கேற்ப மணல் கலந்து விதைக்கலாம்.
விதைத்து ஒரு வாரத்திற்குள் அசோஸ்பைரில்லம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ பாஸ்போபாக்டீரியா 5 கிலோ, பொட்டாஷ் பாக்டீரியா 5 கிலோ, விரிடி ஒருகிலோ, சூடோமேனஸ் ஒரு கிலோ இவற்றுடன் நன்கு மக்கிய ஆறிய தொழுவுரம் 200 கிலோவுடன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிலோ நாட்டு சர்க்கரையை தண்ணீரில் கரைத்து அந்த கலவையில் ஊற்றி நன்கு பிரட்டி புட்டுபதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை கோணிசாக்கை கொண்டு மூடி நிழலில் ஒரு வாரம் வரை வைத்திருக்கனும்.
கீரை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு கலந்து வைத்துள்ள கலவையை ஈரத்திலேயே தூவிவட வேண்டும். அதேபோல இவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து போட்டு வரவும் 40 நாட்களிலேயே கீரை விற்பனைக்கு தயாராகிவிடும்.
அவற்றை சந்தைக்கு அறுவடை செய்து கொண்டு சென்றால் ஒரு முடி 10 ரூபாய் என்று விற்பனை செய்தாலே நமக்கு லாபம்தான். கீரை வளர்ந்து வர, வர தொடந்து அறுவடை செய்து விற்பனை செய்த கொண்டே இருக்கலாம்.
அவை சரியாக வரவில்லை என்றால் அடுத்த வயலிலும் தொடர்ந்து வருமாறு சாகுபடி செய்ய வேண்டும்.
இதேபோல கொத்தமல்லியையும் சாகுபடி செய்து விற்பனை செய்யலாம் இப்பொழுது கீரையை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர் இயற்கை முறையில் சாகுபடி செய்த கீரைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories