அழகும் ஆரோக்கியமும் நமது கையில் உள்ளது.

நம் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு செயல்பட்டால், அழகுக்கு எவ்வித பாதிப்பும் வராது. இயற்கையானக் கூடுதல் அழகுடனும், நாம் மிளிரமுடியும் என்கிறார், நடிகை சமந்தா. நடிகை சமந்தா அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கான அவருடைய பழக்க வழக்கங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவரை இன்ஸ்டாகிராமில் 1.3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னை பின்தொடர்பவர்களுக்கு அழகு குறிப்புகள், உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான தன்னுடைய பழக்கங்கள் குறித்த டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கிண்ணத்தில் சூடான தண்ணீர் மற்றும் சுத்தமான துண்டைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஆவிப் பிடிப்பது சிறந்தது. பொதுவாக இயற்கையான அழகின் மீது நம்பிக்கை கொண்டவர் பெரும்பாலான நேரங்களில் அவர் மேக்கப் போடுவது இல்லை என்பதே உண்மை என்றார்.

குறைபாடற்ற சருமத்திற்காக, வைட்டமின் உட்செலுத்துதல் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இது தோலில் உள்ள மெல்லியக் கோடுகள், உலர்ந்த திட்டுகள் மற்றும் நிறமிகளை குறைக்க உதவுகிறது. இரட்டை மாஸ்க்கிங் முறையை மேற்கொள்வது சிறந்தது. இந்தச் செயல்முறையானது ஒரு மாஸ்க்கிங் முறையை காட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே

உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை, மனதைக் கெட்ட விஷயங்களில் இருந்து விலக்கி வைக்கின்றன. அவ்வாறு விலக்கிவைப்பது, சருமத்தை பளபளபாக்க உதவுகிறது. சிறந்த தோல் மற்றும் ஆரோக்கியத்திற்காக பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டால், அருமையான ரிசல்ட் கிடைக்கும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories