ஆரோக்கியமான கல்லீரலுக்கு சிறந்த உணவு முறைகள்

நம் உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க, உடலின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம். ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான கல்லீரல் அவசியமாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் போதும் பல வயிற்று பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, இரத்தத்தின் அழுக்கை அகற்றுவது, நொதிகளை செயல்படுத்துவது என கல்லீரல் பல வகைகளில் செயல்படுகிறது.மற்றும்

கல்லீரல் சரியாக செயல்பட வில்லை என்றால், அது பலவித உடற் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் சரியாக வேலை செய்யாததற்கு பல காரணங்கள் இருக்கும் இதில்

பொறித்த உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகமாக புகைபிடிப்பது போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன. கல்லீரல் செயலிழப்பு காரணமாக, உடலில் பலவேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளை இங்கே பார்க்கலாம்.

பீட்ரூட்(Beetroot)
பீட்ரூட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்கிறது.

கிரீன் டீ(Green Tea)
கிரீன் டீ கல்லீரலுக்கு மிகவும் நல்லதாக தெரிவிக்கப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகளவில் காணப்படுகின்றன. இது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும். நாள் முழுவதும் 2-3 கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும்.

எலுமிச்சை(Lemon)
எலுமிச்சையின் (Lemon) உதவியுடன் கல்லீரலை ஆரோக்கியமாக மாற்றலாம். இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் எலுமிச்சையில் அதிகளவில் காணப்படுகின்றன. இவை உடலில் இருந்து நச்சுகளை நீக்குவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது என்றார்.
கேரட்(Carrot)
கேரட்டில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நமது உடல் ஆரோக்கியத்தையும் குறிப்பாக கல்லீரலையும் ஆரோக்கியமாக வைக்கும். பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் அதிகளவில் காணப்படுகின்றன.

வெங்காயம்(Onions)
வெங்காயம் (Onion) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை கிடைக்கும். வெங்காயத்தில் கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. அவை கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகின்றன.

பூண்டு(Garlic)
பூண்டு கல்லீரலுக்கு மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டியாக்சிடெண்டுகள், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன என தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories