ஆலமரத்தின் சிறப்பம்சங்கள்

 

 

ஆழமாக வேரூன்றி விழுதுகள் பரப்பி வளரும் மரங்களில் ஆலமரம்மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது..

ஆலமரம் 20 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மிகவும் பருத்து அடி மரத்தை கொண்டது. அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டர் அல்லது அதற்கு மேல் வளரக்கூடியது. கிளைகளிலிருந்து வேர்கள் தோன்றுகின்றன. நாளடைவில் பெரிய தூண் போலஆகின்றன.

கோவில்களில் தல விருட்சமாக இருக்கிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி உண்டு. ஆலமர குச்சி ஒருவித துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும் .ஆலமரம் என்றும் போதிமரம் அழைக்கப்படுவார்கள்.

இதன் இலை ,பழம், பூ ,விழுது ,பால் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது. ஆல மரத்தின் பட்டை நீரழிவு நோய் தீர்க்கும் ஆலமரத்தின் விழுதுகள் ஈறு நோய்களை போக்க வல்லது .இவற்றின் இலைகளை ஆட்டுக்கு தீவனமாக கொடுக்கலாம். ஆலமர இலையில் செய்யப்படும் கசாயம் சளித் தொந்தரவை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories