இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல் நெல் பயிர்களின் வரப்பு ஓரங்களில் உளுந்து,🌱🌱 பச்சைபயறு 🌿🌿மற்றும் செண்டுமல்லி பூ 🌻🌻செடி ஏன் நடனும்? நெல் வயல்களில் வரப்பு பயிர்களாக உளுந்து, பச்சைபயிறு மற்றும் செண்டுமல்லி போன்ற சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தை வேளாண்மைத்துறைஅறிமுக படுத்தி வருகிறது. நடவுமுறை : சம்பா நெல் நடவு பணி முடிந்தவுடன் வரப்பை சுற்றி உள்புறம் சேற்றை அணைத்து அரை அடி உயரத்திற்க்கு உள் வரப்பு அமைக்க பட வேண்டும். அதில் ஒரு அடி இடைவெளி விட்டு குழிக்கு 2-3 பயறு விதைகள் ஊண்றப்படுகிறது. பயறுவகை விதைகள் மண்ணின் ஈரத்தை உறிஞ்சி முளைத்து நன்கு செழித்து வளருந்து விடும். இதன் இடைவெளியில் செண்டுமல்லி, சூரியகாந்தி செடிகளையும் நடலாம். பூச்சிகளையும்🐛🐞🪲🦗🪲 கட்டுபடுத்தும்: பயறு வகை பயிர்களில் பொறிவண்டுகள் அதிகம் இனவிருத்தி அடைந்து நெல் பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுபுழு, புகையான்.இலைப்பேன்,குருத்துபூச்சி போன்ற தீமை தரும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்களை அழிப்பதால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு கிடைப்பதுடன் மருந்து தெளித்திடாத இயற்கை விவசாயத்துக்கு வரப்பு பயிர்கள் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கமால் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2000 முதல் செலவு குறைந்திடும். மேலும் பயறுவகை பயிர்கள் மற்றும் செண்டுமல்லி பூ மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்த தொழில் நுட்பத்தை அனைத்து விவசாயிகள் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எ. ந. லீலாவினோதன், விவசாயி, குட்டக்கிந்தூர், ஆம்பூர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories