இயற்கை வேளாண் தொழில் நுட்பம் பயிற்சி

இயற்கை வேளாண் தொழில் நுட்பம் பயிற்சி

அன்பான உழவர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருக்கும் பசுமை நிறைந்த வணக்கம் 21–12–2021 அன்று விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வேளாண்மை துறை மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையம் சி எஸ் ஐ எம் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை வேளாண் தொழில் நுட்பம் பயிற்சி அளிக்கப்பட்டது பயிற்சியாளர் நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையம் இயக்குநர் மண்ணா ஏகாம்பரம் அவர்கள் பயிற்சியில் மண்வளம் மேம்படுத்த தொழில்நுட்பம் .

பாழ் நிலத்தை புதுப்பிக்கும் பலப்பயிர் சாகுபடி தொழில் நுட்பம் 20 முதல் 25 கி விதைகள் இதில் பயிர் வகைகள் தானியங்கள் வகைகள் எண்ணெய் வித்துக்கள் உரச்செடி வகைகள் வாசனைப் பொருட்கள் இனைத்து விதைத்து 30 நாட்கள் மடித்து உழவு செய்ய வேண்டும் பிறகு விதைப்பு செய்ய வேண்டும் பூக்கும் தருணத்தில் திரும்ப உழவு செய்ய வேண்டும் திரும்ப விதைகள் விதைக்க வேண்டும் 90 நாட்கள் கழித்து உழவு செய்ய வேண்டும் இப்படி செய்வதால் வளம் இழந்த நிலத்தை வளம் பெற முடியும் பிறகு இயற்கை வேளாண் தொழில் நுட்பம் பயன்படுத்தி செய்ய வேண்டும்

இத்தகைய தொழில்நுட்ப உங்கள் தோட்டத்தில் உள்ள கழிவு மறுசுழற்சி செய்தல் நிலத்திற்கு பயிருக்கு பயன்படுத்தி நல்ல மாற்றம் தெரியும்

அமுத கரைசல் தயாரிப்பு தெளித்தல்

பஞ்சகவ்யம் தயாரிப்பு தெளித்தல்

தேமோர் கரைசல் தயாரிப்பு தெளித்தல்

கலவை கரைசல் தயாரிப்பு தெளித்தல்

மீன் அமினோ அமிலங்கள் தயார் செய்து தெளித்தல்

ஊட்ட மேற்றிய தொழு எரு தயார் செய்து தெளித்தல் வேண்டும்

மூலிகை பூச்சி விரட்டி அடிக்கலாம்

இப்படி நமக்கு ஏதுவான எளிய தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்னற்ற தொழில் நுட்பம் இருக்கிறது ஆனால் நமக்கு செலவுகள் இல்லாமல் நம் தோட்டத்தில் கிடைக்கும் கழிவு மறுசுழற்சி செய்து பயன் படுத்தி கொள்ளலாம்

உற்பத்தி செய்யும் பொருட்கள் மதிப்பு கூட்டுதல்

பருவத்தில் விதைக்க வேண்டும் கலப்பு பயிர் ஊடுபயிர் பயிர் சுழற்சி முறைகள் பயன் படுத்தி கொள்ளலாம்

விவசாயிகள் குழுவாக இணைந்து செயலாற்ற வேண்டும்

இப்படி குழுவாக இணைந்து செயல்பட்டு வரும் போது அரசு திட்டம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

விதைகள் மற்றும் உற்பத்தி பொருட்கள் நமது முன்னோர்கள் போன்று பன்டை மாற்றம் முறையில் செயல் படுத்தி கொண்டால் எதிர் காலத்தில் வளர்ச்சி நன்றாக இருக்கும்

நமது சந்ததிகள் நமது பாரம்பரிய அறிவு நுட்பம் பகிர்ந்து கொடுத்து உதவி செய்யுங்கள் அவை எதிர் காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் சமுகம் சார்ந்த வாழ்வியல் சூழலை பல்லுயிர் சூழல் குறித்து பரவலாக கொண்டு செல்லலாம் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் தொடர்பு கொள்ளவும்
பயிற்சி அளிக்கப்பட்டது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள விட்டலாபுரம் கிராமத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையம் பயிற்சி அளிக்கப்பட்டது
மண்ணா ஏகாம்பரம் அவர்கள்
விட்டலாபுரம் கிராம் திண்டிவனம் வட்டம் விழுப்புரம் மாவட்டம்

9095974287–7200773224

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories