இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தாட்பூட் பழத்தை சாப்பிடலாமா?

மரங்களில் கொடிகள் போல் பரவி, அதில் பழம் காய்த்து தொங்குவதை காணலாம். இதனை அந்தப் பகுதியினர் வால்குரட்டை பழம் என அழைக்கின்றனர். உண்மையில் இதன் பெயர் தாட்பூட் பழம்! இந்த பழத்தின் தாயகம் பிரேசில் (Brazil). இந்தியாவிலும் இந்த பழம் பயிரிடப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் பேஷன் பழம் எனவும் அழைக்கின்றனர். காரணம் இந்த பழத்தை பார்க்கும் போதே அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றுவதால் இந்த பெயர் உள்ளது.

முதலில் பிரேசிலில் உள்ள மலைகளில் வளர்ந்த இந்தப்பழம் அந்தப்பகுதியில் நடமாடிய குரங்குகளின் விரும்பிய பழமாக இருந்தது. பிறகு அதனைப் பார்த்துத்தான் மனிதர்களும் இந்த பழத்தை சாப்பிட ஆரம்பித்தனர். மஞ்சள், ஊதா உட்பட பல வண்ணங்களில் இடம், சூழலுக்கேற்ப இந்த பழம் காய்ச்சு பழுக்கின்றன. இந்த பழம் கொரோனா (Corona) காலத்தில் சிறந்த பழமாக கருதப்படுகிறது. காரணம் இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன இதில்

மருத்துவ குணங்கள்
இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் B-6, B-7 சத்துக்கள் அடங்கியுள்ளன.
இந்த பழத்தை பழமாக மட்டுமில்லாமல் ஜூஸாகவும் (Juice) சாப்பிடலாம் மற்றும்
தைராய்டு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
இதில் உள்ள மெக்னீசியம், கவலை மற்றும் மனஅழுத்தத்தை விரட்டும் தன்மை கொண்டதாம்.
இந்த பழத்தை கொய்யா, மாம்பழம், பப்பாளி மற்றும் தர்பூசணி உட்பட பல தண்ணீர் நிறைந்த பழங்களுடன் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
பேஷன் பழத்தில் ஜாம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலை நாடுகளில் ஐஸ்கிரீம் மற்றும் மதுபானங்களிலும் இதனை இணைத்து சாப்பிடுகின்றனர்.
கேக்குகள், மாவினால் செய்யப்படும் பண்டம், பழம் அல்லது மாமிசம் கொண்டு வேக வைத்த உணவு, பழம் கொண்டு தயாரிக்கப்படும் பணியாரம், சுவையூட்டிகள், தக்காளி சாஸ், குழம்பு மற்றும் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories