உடலுக்கு நன்மை அளிக்கும் சிறந்த ஸ்நாக்ஸ் பார்ட்னர் பிஸ்தா பருப்பு

உங்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடிய பேக்கரி ஸ்நாக்ஸ் பொருட்களுக்குப் பதிலாக, அதிக நன்மை கொண்ட பிஸ்தா பருப்புக்களையே நீங்கள் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம். உடல் நலனுக்காக நட்ஸ் வகைகளை விரும்பி சாப்பிடுபவர்கள் பலருக்கு, முந்திரி, பாதாம் மீதுள்ள ஆர்வம், பிஸ்தா மீது ஏற்படுவதில்லை. ஆனால், பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும் பிஸ்தா பருப்புக்களில், உடலுக்கு நன்மை அளிக்கும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் இது விளைவிக்கப்படுகிறது.

ஸ்நாக்ஸ் பார்ட்னர் (Snacks Partner)
பிஸ்தா பசியை கட்டுப்படுத்தும் என்பதால், சாப்பாட்டுக்கு முன்பாக இதை எடுத்துக் கொண்டால், நீங்கள் உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். உடலுக்கு நன்மை பயக்கும் நல்ல கொழுப்பு மற்றும் சர்க்கரை சத்து இதில் உள்ளது.

புரதச்சத்து (Proteins)
பிஸ்தா பருப்புக்களில் புரதச்சத்து நிறைந்து இருப்பதால், இது உங்களுக்கு போதுமானது. அதேசமயம், பிற நட்ஸ் வகைகளைக் காட்டிலும், இதை நீங்கள் அதிகமாக உட்கொள்ளலாம்.

நார்ச்சத்துக்கள் (Fiber)
பிஸ்தா பருப்புக்களில் உங்கள் குடலுக்கு நன்மை விளைவிக்கும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. உங்கள் வயிறு எளிதில் நிரம்பியதை போன்ற உணர்வை கொடுக்கும். அதேசமயம், ஜீரணத்தை ஊக்கப்படுத்தி, மலச்சிக்கலை குறைக்கும் என்றார்.

மன அழுத்தம் குறைய (Stress Relief)
பிஸ்தா பருப்புக்களை சாப்பிட்டால், உங்களுக்கான மன அழுத்தம் குறையும். குறிப்பாக, பிஸ்தா பருப்புக்களை உடைக்கும்போது, உங்கள் மனம் அதை வேடிக்கையாக ரசிக்கக் கூடும். இதன் விளைவாக மன அழுத்தம் குறையும் என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories