உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக வாழ, வழிமுறைகள்!

டீடாக்ஸ் உணவுத் திட்டங்கள் உலகெங்கிலும் பெரும் புகழ் பெற்றிருக்கின்றன. எலுமிச்சை, நெல்லிக்காய், கீரை வகை போன்றவற்றை வைத்து ஆரோக்கியமான டீடாக்ஸ் பானங்களை செய்து, உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலில் இருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறுவதுடன், எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

ஏராளமனோர் இந்த புத்தாண்டில பல உறுதிமொழிகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், உங்கள் உறுதிமொழி உடல் எடையை குறைப்பது என்றால் இதை ட்ரை செய்யுங்கள், கண்டிப்பாக பயன் பெறுவீர்கள். மேலும் உடற்பயிற்சி எடுத்துக்கொள்வது முக்கியம். நீங்கள் எளிமையான முறையில் உடல் எடையை குறைத்து உடலினை ஆரோக்கியமாக வைத்து கொள்ள டீடாக்ஸ் பானங்கள் பெரும் உதவியாக இருக்கும். பொதுவாக உங்களது உணவில் இயற்கையான டீடாக்ஸ் பானங்கள் அருந்துவது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுவதோடு உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும் என்று உடற்பயிற்சி ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே ஆரோக்கியம் நிறைந்த டீடாக்ஸ் பானங்கள் குடிப்பது குறித்து சில எளிய டிப்ஸ் கீழே வழங்கப்பட்டுள்ளன இதில்

கீரை மற்றும் எலுமிச்சை சாறு (Lettuce and lemon juice)
நம்முடைய அன்றாட உணவில் கீரை மற்றும் எலுமிச்சை சாறுகளை குடிப்பதினால், இவை நம் உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. மேலும் உடலில் இழந்த திரவத்தை மீட்டெடுக்கவும், உடல் எடை இழப்பிற்கும் உதவியாக இருப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை மற்றும்

நெல்லிக்காய் ஜூஸ் (Gooseberry Juice)
நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி உள்ளது. மேலும் நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமானப்பிரச்சனைக்குத் தீர்வாகவும் உள்ளது. இதோடு இது உடல் எடைக்குறைப்பதற்கும் உதவுகிறது. எனவே உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு இனி மேல் தினமும் காலை வேளையில் நெல்லிக்காய்களை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடலாம். மேலும், நெல்லிக்காய்-யை காயாகவே கடித்து சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால் சிலரின் உடல்வாகிற்கு நெல்லிக்காய், ஒற்றுப்போவதில்லை, அதை அறிந்து சாப்பிடவும். மேலும் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்ட லிங்க்-இல் கிளிக் செய்யவும்.

தேன் எலுமிச்சை இஞ்சி டீ (Honey, Lemon juice with Ginger Tea)
சூடான இஞ்சி டீயில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்துச்சாப்பிடலாம். இந்த பானத்தைப் பருகுவதன் மூலம் உடலில் உள்ள தேவையில்ல கொழுப்புகள் குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும் என்பது குறிப்பிடதக்கது.

ஜிஞ்சர் அதாவது இஞ்சி பானம் (Ginger drink)
இந்துப்பு மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கும் பானம் தயாரிப்பதற்கு மிகவும் எளிமையானது. இந்த டீடாக்ஸ் பானத்தை தினமும் பருகும் போது, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் மிளகு இஞ்சி கலந்த பானம், இஞ்சி டீ , காரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் போன்றவற்றையும் நீங்கள் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories