வங்கதேசத்தில் வாழும் 51 செ.மீ., உயரமுள்ள உலகின் மிகக் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
மற்றவர்களைக் கவரும் (Attracting others)
பொதுவாக உலகிலேயே பெரிய விஷயமாக இருந்தாலும், சிறிய விஷயமாக இருந்தாலும் அது அதிக முக்கியத்துவம் பெறும் மற்றும்
உலகை ஈர்த்தது (Attracted the world)
அந்த வகையில், 51 சென்டிமீட்டர் உயரமுள்ள பசு, தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
26 கிலோ எடை (Weight 26 kg)
வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. 26 கிலோ எடை கொண்ட இந்த பசுவின் உயரம் எவ்வளவு தெரியுமா? வெறும் 51 சென்டிமீட்டர்தான். நீளம், 66 சென்டி மீட்டர். எடை 26 கிலோ.
பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசுவாகக் கருதப்படுகிறது.
பகிரப்படும் தகவல் (Information to be shared)
இந்த பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
குவியும் மக்கள் (Accumulating people)
இதனால், கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவைக் காண ஆயிரக்கணக்கானோர். அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் எனவே
அதிகாரிகள் அறிவுறுத்தல் (Instruction of officers)
இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார் இதில்
முந்தைய சாதனை (Previous record)
இதற்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.