எந்த உடற்பயிற்சியும் தேவையில்லை – உணவில் இந்த மசாலாக்களைச் சேர்த்தால் Weight குறைவது உறுதி!

எடையைக் குறைக்க வேண்டும் எனக் கருதுபவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் அனுதின உணவில் இந்த 5 மசாலா பொருள்களைத் தவறாமல் சேர்ததுக்கொண்டாலே போதும், உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.

மிக முக்கிய பிரச்னை (The most important problem)
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய அவசர உலகில் மிகப் பெரியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிலும் இந்தக் கொரோனா காலத்தில், வீட்டில் இருந்தபடியே வேலைசெய்யும் நபரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு இந்தத் தகவல் உதவும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க யோகா மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். எடை அதிகரிப்பு பல உடல்நலம் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. அதிலும், தற்போதைய கோவிட் பிரச்சனைகளுக்கு இடையே உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்பது கட்டாயமாகி விட்டது.
கூடிப்போன உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறீரா…? அப்படியெனில் உடல் எடைக் குறைப்புக்குப் பின்வரும் மசாலாக்கள் உங்கள் உணவில் தவறாமல் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

எடைக் குறைப்பு உணவுகள் (Weight loss foods)
பலர் விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்பி பல வழிமுறைகளை நாடுகின்றனர். அதில் சில வழிமுறைகள் ஆரோக்கியமான தேர்வுகள் இல்லை. அதற்குப் பதிலாக, நாம் சமைத்து உண்ணும் உணவில் சிலப் பொருட்களை சேர்த்துக் கொள்வது உங்களின் உடல் எடையைக் குறைக்க உதவும் எனவே

பொதுவாக இந்திய உணவுகள் என்றாலே மசாலாப் பொருட்கள் இல்லாமல் இருக்காது. இதுபோன்ற மசாலாப் பொருட்கள், உணவுக்குச் சுவையைச் சேர்ப்பது மட்டுமின்றி, தொப்பையைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும் இதில்

எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புவோர் நாங்கள் கூறும் இந்த 5 மசாலாப் பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சரி வாங்க அந்த 5 மசாலாப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

இலவங்கப்பட்டை (Cinnamon)
நம் வீட்டுச் சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை, உங்களின் உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. இலவங்கப் பட்டையில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இலவங்கப்பட்டை நீரைக் குடிப்பது ஒருவரின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் விரைவானக் கொழுப்புக் கரைப்பு நிகழும் மற்றும்

​பெருஞ்சீரகம் (Fennel)
எடையை இழக்க உதவும் மற்றொரு மசாலாப் பெருஞ்சீரகம். இது இயற்கையாகவேப் பசிக்காமல் இருக்க உதவுகிறது. பெருஞ்சீரகத்தைத் தேநீரில் கலந்தும் அருந்தலாம். வைட்டமின் ஏ, சி மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துகள் நிறைந்த பெருஞ்சீரகத்தைத் தேயிலையுடன் சேர்த்துக் குடிக்கும்போது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, சிறந்த செரிமானத்துக்கு வழி வகுக்கும் பெருஞ்சீரகம், விரைவாக எடை இழப்புக்கும் வழி வகுக்கிறது.

​வெந்தயம் (Dill)
வெந்தயத்தில் காணப்படும் அதன் இயற்கையான நார்ச்சத்து பசியை அடக்க உதவி புரியும். இதில் உள்ள நார்ச் சத்து, எப்போதும் உங்களை முழுதாக உணர வைக்கும். இதனால், நீங்கள் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படும். வெந்தயத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவும். மேலும், இதில் உள்ள நார்ச்சத்து எடை இழப்பை ஊக்குவிக்கும்.

​ஏலக்காய் (Cardamom)
ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் இரவே ஊறவைத்து விட்டு காலை எழுந்ததும், அதனை சாப்பிடுவது வளர்சிதை மாற்ற செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது. ஏலக்காயில் மெலடோனின் போன்ற அத்தியாவசிய மூலங்கள் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க அவசியமான மூலங்களாகும். வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாகக் கரைக்கப்பட்டு, அதிக ஆற்றல் வெளியாகும். இதனால், உடல் பருமன் மற்றும் கூடுதல் உடல் எடை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

​மிளகு (Pepper)
கருப்பு மிளகு நமது உடலில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. இந்த மசாலா உங்கள் வளர்ச்சிதை மாற்றத்திற்கு ஊக்கமளிக்கிறது. என்ன செய்தும் உங்களின் உடல் எடை குறையாவிடில், நீங்கள் கிரீன் டீயில் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் வரை குடிக்க வேண்டும். அல்லது காலையில் எழுந்ததும் 3 அல்லது 4 மிளகை மென்று தின்றுவிட்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம். மிளகில் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இதனை தொடர்ந்து நீங்கள் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களின் உடல் எடையைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்று கூறினார்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories