கண்கள் இரண்டும் சோர்வடையாமல் இருக்க என்ன செய்யலாம்!

கண்ணில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை உள்ளது. வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போது அதிகரித்து வரும் நோய்களுக்கும், மருத்துவ முறைகளை அன்றே உருவாக்கி வைத்துள்ளனர்.

கேட்ராக்ட் கண்புரை
வயதாகும் போது, கண் லென்சின் (Lens) துல்லியம் குறைந்து, பார்வை மங்கலாக தெரியும். கோளாறு முற்றினால், அறுவை சிகிச்சை தான் வழி. துவக்க நிலையில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையால் சரி செய்யலாம்.
பார்வை குறைபாடு, மங்கலாக தெரிவது, கண்களில் வலி, தலைவலி ஆகிய கிட்ட, துாரப்பார்வை குறைபாட்டை, ஆயுர்வேத சிகிச்சையோடு, உணவு முறையில் மாற்றம், கண்களுக்குப் பயிற்சி தருவதால் மேம்படுத்தலாம்.

க்ளூக் கோமா
கண்ணில் அழுத்தம் அதிகமாகும் போது, கண் நரம்புகள் பாதிப்பதால், ஒரு பகுதி பார்வை தெரியாது. தீவிரமானால் பார்வை இழக்கும் அபாயம் உள்ளது. தொடர் ஆயுர்சேத சிகிச்சை மூலம், கண்ணில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, நரம்புகளின் பலத்தை அதிகரிக்க முடியும் எனவே

சர்க்கரை நோய்
கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், கண்ணின் ரத்தக் குழாய்களை பாதிக்கும்; கண்ணின் ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது கசிவை ஏற்படுத்துகிறது. இது விழித்திரையில் உள்ள ரத்த ஓட்டத்தை பாதிக்கும். ரத்தக் குழாய்கள் பலமிழந்து ரத்தபோக்கு, நீர்க்கட்டு ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கண் பரிசோதனை செய்வது நல்லது இதில்

‘யுவிஐடீஸ்’ அறிகுறி
கண்ணின் மையப் பகுதியில் உள்ள மெல்லிய திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் இந்நோயில், பார்வை குறைபாடு, கண் சிவந்து போதல், வலி, வெளிச்சம் பார்க்கும் போது கூசுதல் போன்றவை ‘யுவிஐடிஸ்’சின் அறிகுறிகள். ஆயுர்வேதத்தில் இதற்கு தொடர் சிகிச்சை உண்டு என்றார்.

கண்களை சுழற்றுதல் (Eye Rotation)
உள்ளங்கைகளை தேய்த்து, மூடிய கண்களின் மேல் கைகளை 30 வினாடிகள் வைத்து, கருவிழிகளை மேலும் கீழும் ஆறு முறை, இடது வலது பக்கம் ஆறு முறை, கடிகார திசையிலும், எதிர் கடிகார திசையிலும் ஆறு முறை, வட்ட வடிவில் ஆறு முறை சுழற்றவும்.

கையை முன்பக்கம் நீட்டி, பெருவிரலின் நுனியை பார்க்கவும். உயர்த்திய கைகளை, மேலே, கீழே, இடது, வலது, கடிகார திசை, எதிர் கடிகார திசையில் சீராக உயர்த்திய நிலையிலேயே கைகளை கொண்டு வரவும். கண்கள் பெருவிரலின் நுனியை மட்டும் பார்க்க வேண்டும் மற்றும்

ஒரு கையில் இருந்து மறு கைக்கு அரை வட்ட வடிவில் இருக்குமாறு ஒரு பந்தை போடவும். பந்து போகும் பாதையில் தலையையும், கண்களையும் திருப்பவும். பந்தை தரையில் எறிந்து, கண்களின் மட்டத்திற்கு உயரும் போது பிடிக்கவும்.
மெழுகுவர்த்தியின் சுடரை, கண்களின் மட்டத்திற்கு நேரே வைத்து, 3 அடி துாரத்தில் இருந்து நுாறு எண்ணும் வரை பார்க்கவும் என்று கூறினார்.

டாக்டர் நாராயணன் நம்பூதிரி
தலைமை மருத்துவர்,
ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை கூத்தாட்டுகுளம்,
கேரளா.
94470 33927

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories