காலையில் வெறும் வயிற்றில் குடிக்க மூன்று டிடாக்ஸ் தேநீர்கள் புதிய முயற்சி

காலையில் வெறும் வயிற்றில் குடிக்க மூன்று டிடாக்ஸ் தேநீர்கள் புதிய முயற்சி

இந்த மூன்று டிடாக்ஸ் பானங்களில் ஒன்றை, காலையில் வெறும் வயிற்றில் பருகினால், நாள் புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், இது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் நமது வயிறு மற்றும் குடலுடன் தொடர்புடையது என்பதில் சந்தேகமில்லை. குடல் பிரச்சினைகள், தினசரி வழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இவைகளை சமாளிப்பது, நமக்கு கடினமாக இருக்கலாம். அவை தினசரி அடிப்படையில் உங்களைப் பாதிக்கலாம்.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் சரியான வகை உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், உங்கள் தினசரி வழக்கத்தில் சில பானங்களைச் சேர்த்தால் நன்மை பயக்கும். எனவே இப்போது நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டிய 3 பானங்களைப் பார்க்கலாம் என்று கூறினார்.

எலுமிச்சை தண்ணீர்:
எலுமிச்சை நீர் பல ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளது. அதிகாலையில் தயார் செய்யக்கூடிய எளிதான பானங்களில், இதுவும் ஒன்று. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், பாதி எலுமிச்சையை பிழியவும். நீங்கள் அதில் வேண்டுமென்று நினைத்தால் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் வைட்டமின் சி உள்ளது. உடலின் pH அளவை சமன் செய்கிறது. செரிமான அமில சுரப்பை மேம்படுத்துகிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
இஞ்சி தேநீர்:
இஞ்சி தேநீர் தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் பல வழிகளில் உங்களுக்கு பயனளிக்கும். வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடிப்பதால், செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது, குமட்டலை நீக்குகிறது மற்றும் தொண்டை புண் நீங்குகிறது. 1 அங்குல துருவிய இஞ்சியுடன் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சுமார் 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது டீயை வடிகட்டி, சூடாக இருக்கும்போதே குடிக்கவும். இஞ்சியின் சுவை அதிகமாக இருந்தால் அரை ஸ்பூன் தேன் சேர்க்கவும் என்றார்.

துளசி தேநீர்:
ஒரு கிண்ணத்தில் 1½ கப் தண்ணீர் சேர்க்கவும். 5-6 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது இந்த தேநீரை ஒரு கப்பில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். துளசி தேநீர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது வாய் துர்நாற்றத்தை தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது இதில்

இவ்வாறு இந்த மூன்று தேநீரை உபயோகித்து பயனடையுங்கள்.
மேலும் படிக்க..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்கள் இவைகள் தான்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories