குப்பைகளை மறுசுழற்சி செய்து, இயற்கை உரம் தயாரிக்கும் புதிய யுத்திகள்!

தேனி அல்லிநகரம் நகராட்சியில் 18 டன் மக்கும்குப்பை, 14 டன் மக்காத குப்பை என தினமும் 32 டன் சேகரமாகிறது. இதன் அளவு பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட மற்ற ஐந்து நகராட்சிகளில் மாறுபடும். ‘துாய்மை இந்தியா (Clean India)’ திட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் குப்பையை அறிவியல் பூர்வமாக கையாண்டு மறுசுழற்சி (Recycle) செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

மறுசுழற்சி செய்யப்படும் குப்பை:
மறுசுழற்சி செய்வதற்காக குப்பையை வீடு, நிறுவனங்கள் தரம் பிரித்து வாங்கி, அந்தந்த பகுதியில் சிறிய உரக்கிடங்குகள் அமைத்து இயற்கை உரமாக (Organic Fertilizer) மாற்றலாம். அதற்காக ‘எபெக்டிவ் மைக்ரோப்ஸ் (Effective Microbase)’ எனும் இயற்கைநொதியை கலந்து வாசம் இன்றி 48 நாட்கள் உலர வைத்து உரமாக்கும் தொழில் நுட்பம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது எனவே,

மக்காத குப்பை
சில நகரங்களில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு உள்ளது. மக்காத குப்பை பாலிதீன், பிளாஸ்டிக், பை, அட்டை என மக்காத குப்பையை அரியலுாரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக வழங்க வேண்டும். மக்காத குப்பை சேகரித்து பண்டல்களாக கட்டி லாரிகளில் ஏற்றி அனுப்ப வேண்டும். ஒரு டன் அனுப்ப ரூ.3000 வீதம் ஒரு லாரியில் 10 டன் அனுப்ப ரூ.30 ஆயிரம் செலவாகிறது. ஓரிரு முறை அனுப்பிய நகராட்சி அதிகாரிகள் செலவு அதிகம் என்பதால் எப்படி கையாள்வது என தவித்தனர்.

புதிய தொழில் நுட்பம்
இந்நிலையில் மக்காத குப்பையை இயந்திரம் மூலம் கையாண்டு மறு சுழற்சி பொருளாக மாற்ற ‘இன்ஸ்ட்லரேஷன் கன்ட்ரோல்டு பயரிங் (Installration controlled firing)’ என்ற நவீன தொழில் நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இந்த இயந்திரத்தில் 900 டிகிரி வெப்பத்தில் மக்காத குப்பை எரிக்கப்படும். உச்சபட்ச வெப்பத்தில் எரிக்கப்படுவதால் புகை, மாசு வெளியேறுவது இல்லை. இவற்றில் இருந்து கட்டுமானத்திற்கு பயன்படும் சாம்பல், ரோட்டிற்கு பயன்படும் தார் போன்ற மதிப்பு கூட்டிய பொருளாக கிடைக்கும். இத்திட்டம் தேனி நகராட்சி மூலம் தப்புக்குண்டு உரக்கிடங்கில் செயல்படுத்த ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது. மாவட்டத்தில் உள்ள தேனி உள்ளிட்ட ஆறு நகராட்சிகளின் குப்பை இங்கு மறுசுழற்சி செய்யப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories