கேழ்வரகு ஆண்டுக்கு ஒருமுறை விளையும் தானிய பயிராகும்.
இதே வேறு பெயர்களில் ராகி மற்றும் கேப்பை ஆகும்.
எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்தியாவில் முழு நீள அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும் ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம் கேழ்வரகு ஆகும்.
இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை ,மலேசியா, சீனா, மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது.
கர்நாடகமும் தமிழ்நாடும் ராகிசாகுபடி செய்யும் முதன்மை மாநிலமாகும்.
இந்தியாவில் கர்நாடகா ,தமிழ்நாடு, ஆந்திரம், ஒரிசா, குஜராத் ,மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் மலைப்பகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.