கொளுத்தும் வெயில்- தாகம் தீர்க்கும் நுங்கு நல்ல விற்பனை!

கோடை வெயில் அடிச்சுத்தாக்கத் தொடங்கிவிட்டதால், தமிழகம் முழுவதும் நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது.

கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. காலை 10 மணிக்கு மேல், மாலை 4 மணி வரை வெப்பம் அடிச்சுத் தாக்கிவருகிறது என்றார்.

மக்கள் கூட்டம் (crowd)
இதனால் மக்கள் தங்கள் தாகத்தைத் தீர்க்க,இளநீர், தர்பூசணி, சர்பத் போன்றவற்றை அதிகம் வாங்குகின்றனர். அந்தவகையில் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சாலையோரங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.

கோவை நகரில் வெயில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. முக்கிய சாலையோரங்கள் மற்றும் பஸ்நிறுத்தங்களின் அருகில் இளநீர், சர்பத் போன்ற கடைகள் அதிகளவில் உருவாகியுள்ளன.

அதிகரிக்கும் நுங்கு கடைகள் (Increasing sip stores)
எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்களும், அதிகளவில் இந்த சாலையோர கடைகளில் திரண்டு வருகின்றனர். இதில், நுங்கு கடைகளை தேடி அதிகளவில் பொதுமக்கள் குவிகின்றனர்.

மருத்துவ குணம் (Medicinal properties)
நுங்கு, மருத்துவ குணமும் கொண்டதால், நடந்து செல்பவர்கள் முதல் காரில் செல்பவர்கள் வரை, சாலையோர நுங்கு கடைகளில் திரண்டு வருகின்றனர். பொள்ளாச்சி, வேலந் தாவளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நுங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விலை (Price)
12 நுங்கு, ரூ.100க்கும். ஒரு நுங்கு ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதோடு, பதநீர் ஒரு டம்ளர், ரூ.20க்கும், ஒரு லிட்டர், ரூ.80க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் மாநிலத்தின் பலபகுதிகளிலும், நுங்கு விற்பனை களைகட்டியுள்ளது என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories