கோடை வெயிலை Beat செய்ய பெஸ்ட் ஐடியா

 

சுட்டெரிக்கும் சூரியன், வாட்டி வதைக்கு வெப்பக் காற்று, என வெயிலின் கொடூரம் நம்மை பல விதங்களில் பாடாய்படுத்தி வருகிறது. வரும் முன் காப்போம் என்பதைப்போல, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து, நம்மைப் பாதுகாத்தக்கொள்ள சில பானங்களைத் தவறாமல் எடுத்துக்கொள்வது நமக்குப் பல வகைகளில் பலன் அளிக்கும். கோடை வெப்பத்தை எதிர்கொள்ளத் தயாராகும்போது உடலை நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது மிக மிக முக்கியம். வெப்பநிலை உயர தொடங்கும் போது உடலில் நீரிழப்பு உண்டாகலாம். சோர்வு, வியர்வை மற்றும் குழப்பம் உண்டாகலாம். அதனால் எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் தாகத்தைத் தணிக்க தண்ணீர் மிக முக்கியமான பானமாக இருந்தாலும், உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும் பிற கோடைகால பானங்களைப் பருகலாம். வெப்பத்தைத் தணிக்க, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக சில ஆரொக்கியமான கோடைகால பானங்கள் உடலை புதுபிக்க உதவும் என்றார்.

இளநீர்
இயற்கையான கேடோரேட் என்று அழைக்கப்படும் இளநீரில், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இதனைப் பருகுவதால், அதிக வியர்வையால் உடல் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புகிறது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.அது மட்டுமல்லாமல்,இளநீர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது இதில்

கரும்புச்சாறு
கரும்புச்சாறு இல்லாமல் கோடைக்காலம் முழுமையடையாது. கரும்புச்சாற்றில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருப்பதால், இது உடலில் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கரும்புச்சாற்றில் இருக்கும் டையூரிடிக் சிறுநீர்பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீரக கற்கள் மற்றும் உறுதி செய்ய உதவுகிறது. சிறுநீரகத்தின் சரியான செயல்பாடு மற்றும்

புரத சத்துபானம்
புரத குலுக்கல் ஆன இது ஏழைகளின் புரதம் என்றும் அழைக்கப்படுகிறது. வறுத்த கொண்டைக்கடலையை பொடியாக்கி வைத்து பயன்படுத்தலாம். இது உடலூக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. 100 கிராம் சத்து 20 கிராம் புரதத்தை அளிக்கிறது. இதில், கரையாத நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், பெருங்குடலைச் சுத்தம் செய்வதோடு மலச்சிக்கல், வீக்கம், அமிலத்தன்மை போன்றவற்றையும் எளிதாக்க செய்கிறது. ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் பவுடர் சேர்த்து குடிக்கலாம். அல்லது ஒரு டம்ளர் மோரில் குடிக்கலாம்.

எலுமிச்சை சாறு
புதினா இலைகள், எலுமிச்சை. சர்க்கரை, உப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நீரேற்றம் தவிர சரும ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நன்மை அளிக்கும் மற்றும்

மோர்
குளிர்ந்த மோர் கோடைக்காலத்துக்கு இனிமையான பானம். வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் உங்கள் உடலுக்கு தேவையானது ஒரு டம்ளர் மோர். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. மோர் மிகவும் புத்துணர்சியூட்டும் மற்றும் விரைவாக நம் உடலைக் குளிர்விக்கும்.
சீரகம், புதினா மற்றும் உப்பு சேர்த்த ஒரு டம்ளர் மோர் தாகத்தை தணிப்பதோடு, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கோடை மாதங்களில் இது உடலை குளிரச் செய்யும். இது வழக்கமான குடல் இயக்கத்தைப் பராமரித்து மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கிறது என்று கூறுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories