கோயம்புத்தூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை பற்றி ஒரு செய்தி!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையத்தில் இயங்கி வரும், தமிழ்நாடு பாசன விவசாயிகள் மேம்பாட்டு திட்டத்தின் (Tamil Nadu Irrigation Farmers Development Project) மூலம் கடந்த 14 வருடங்களாக கோயம்புத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் உழவர் சந்தைகளில் காய்கறிகள் (Vegetables) விலை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தக்காளி, வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காய் விலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது இதில்,

காய்கறிகளின் விலை:
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், வரவிருக்கும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், தரமான தக்காளியின் பண்ணை விலை (Farm price of tomatoes) ஒரு கிலோ 17 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும், வெண்டைக்காய் விலை ஒரு கிலோ 21 ரூபாய் முதல் 23 ரூபாய் வரையும் மற்றும் கத்திரிக்காய் விலை ஒரு கிலோ 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே விலை அறிதல்:
தமிழ்நாடு பாசன விவசாயிகள் மேம்பாட்டு திட்டத்தின் இந்த ஆய்வின் மூலம், காய்கறிகளின் விலையை முன்கூட்டியே அறிந்து கொண்டதால், காய்கறிகளை வாங்கும் மக்கள் விற்பனை விலையின் உண்மைத்தன்மையை அறிந்து கொண்டுள்ளனர். எந்நேரமும் விலையேற்றம் நிகழும் என்பதால, இனி மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதோடு, விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற இலாபம் கிடைக்க தோட்டக்கலை துறை (Horticulture Department) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories