சந்தையில் விற்பனையாகும் போலி இஞ்சி- கண்டுபிடிக்க எளிய வழி!

அண்மைகாலமாக காய்கறி மார்க்கெட்டுகளில் போலி இஞ்சி (Ginger) விற்பனைக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனை சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. எனவே எச்சரிக்கையுடன், இருக்க வேண்டியது முக்கியம்.

சமையலுக்கு இன்றியமையாத இஞ்சி (Ginger essential for cooking)
சைவ வகை உணவானாலும் சரி, அசைவ வகை உணவானாலும் சரி,, இரண்டிலும் இஞ்சி இல்லாமல், எதுவுமே நடக்காது. ஏனெனில், சமையலில் எப்போதுமே கோலோச்சுவது இஞ்சியின் பண்பு. இஞ்சியின் மணமும், சுவையும் நமக்கு இன்றியமையாததாக மாறி விட்டது என்றார்.

இஞ்சி (Ginger)
காலையில் எழுந்தவுடன் இஞ்சி டீயில் ஆரம்பித்து, இரவில் வயறு உப்புசத்தைப் போக்கும், இஞ்சி-புளிச் சாறு வரை, காலை முதல் மாலை வரை நம் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று இஞ்சி.

இதனால் இந்திய சமையலறைகளில் இஞ்சி பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம்.

ஆனால் தற்போதைய அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால், சந்தைகளில் போலி இஞ்சியும் சத்தமில்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இது உங்களுக்கு பயனளிப்பதற்கு பதிலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு (Health) தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இஞ்சி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை வாங்கும் போது பார்த்து வாங்குவது முக்கியம். அதை எப்படித் தெரிந்து கொள்வது என்பதைப் பார்க்கலாம்.
இஞ்சியை ஒத்த மலைவேர் (Ginger root)
மலை வேருக்கும் இஞ்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. மலை வேர் இஞ்சி பார்ப்பதற்கு இஞ்சியைப் போலவே இருக்கும். எனவே இதுதான் போலி இஞ்சியாக உருமாற்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், உண்மையான இஞ்சியில் மணம் அதிக அளவில் இருக்கும். அதேசமயம் போலி இஞ்சியில் வாசனை இல்லை. அதனை நீங்கள் முகர்ந்து பார்த்து அடையாளம் காணலாம்.

தோல் மூலம் அடையாளம் (Identified by skin)
இஞ்சி வாங்குவதற்கு முன், அதன் தோலின் மீது தனி கவனம் செலுத்துங்கள். இஞ்சியில் நகங்களைத் வைத்து அழுத்தி பார்க்கலாம். உண்மையான இஞ்சி என்றால், நகங்கள் எளிதாக உள்ளே செல்லும். மேலும் அதன் வாசனை உங்கள் கைகளில் நீண்ட நேரம் இருக்கும்.
ஆனால் இஞ்சியின் தோல் மிகவும் கடினமாக இருந்தால், அதை மறந்தும் வாங்கிவிடாதீர்கள்.

 

பளபளக்கும் இஞ்சி (Shiny ginger)
பார்ப்பதற்குச் சுத்தமாக இருக்கும் இஞ்சியை எக்காரணம் கொண்டும் வாங்க வேண்டாம். ஏனெனில், இஞ்சி பார்ப்பதற்கு சுத்தமாக பளபளக்க வேண்டும் என்பதற்காக, கடைக்காரர்கள் இஞ்சியை அமிலத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிறார்கள். அதனால், இது போன்ற இஞ்சியை வாங்க வேண்டாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories