சீதா மரத்தில் காய் பெருக என்ன செய்ய வேண்டும்

ஆட்டிற்கு பால் நன்றாக ஊறுவதற்கு என்ன தீவனம் அளிக்கலாம்

சினை ஆடுகளுக்கு குட்டி ஈனுவதற்கு 3 முதல் 4 வாரங்கள் முன்பு அதிக அளவில் அடர்தீவனம் அளிக்க வேண்டும் .அவ்வாறு அளித்தால் குட்டி ஈன்ற உடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும் .குட்டி ஈன்ற ஆடுகள் பால்தரும் காலத்தை கவனித்தால் பொதுவாக 142 முதல் 150 நாட்கள் வரை இருக்கும். இதை விட குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களில் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

வாழைத்தோட்டத்தில் வெள்ளை பூச்சிகள் அதிகமாக உள்ளது என்ன செய்யலாம்

பச்சை மிளகாய் 250 கிராம் ,இஞ்சி 250 கிராம், பூண்டு250 மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து 300 மில்லி 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளி க்க வேண்டும் இதன் மூலம் கள்ளி (மாவுப்பூச்சி)பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

சீதா மரத்தில் காய் பெருக என்ன செய்ய வேண்டும்

முறையான பாசனம் செய்ய வேண்டும். அதோடு 20 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யா கரைசலை 200 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து விடலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories