அடர்த்தியான பால்
சிலர் பால் அடர்த்தியாக இருந்தால்தான் நல்லது என நினைப்பார்கள் ஆனால் அது தவறு .தண்ணீராக காணப்பட்டாள் தான் அது நல்ல பால்.பாலில் 87சதவீதம் தண்ணீர் உள்ளது.
13 சதவீதத்தில் 9 சதவீதம் புரதம் லாக்டோஸ் தாதுக்கள் விட்டமின்கள் மற்றும் 4% கொழுப்புகள் உள்ளன. பொதுவாக மாட்டிலிருந்து கறக்கப்படும் பால் குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு கெடாமல் இருக்கும் .பாலில் அதிக சத்துக்கள் உள்ளன .அதாவது கால்சியம், பொட்டாசியம் ,புரதம், பாஸ்பரஸ் சில விட்டமின்கள் ஆகியவை சத்துக்கள் உள்ளன. பாலில் உள்ள சத்துக்கள் போல மற்ற பொருட்களான சாமை ,தினை, வரகு ,கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் உள்ளது.
கலப்பட பாலை அறிய
விறைப்பு தன்மை கொண்ட ஒரு ஓடு மீது சிறு துளிகளை விட்டால் அந்த பால் வழியும் தடத்தில் ஒரு வெள்ளை நிற கோடு காணப்படும். அவ்வாறு காணப்பட்டால் அது தண்ணீர் கலக்காத சுத்தமான பால் எனலாம். வெள்ளை நிறகோடு காணப்படவில்லை என்றால் அது தண்ணீர் கலந்த பால் ஆகும்.
மேலும் பாலில் அயோடின் கலந்த நீல நிறமாக மாறும் அது மாவுப்பொருள் கலக்கப்பட்ட பாலாகும்.