செடிகள் வைத்திருப்போரின், பெரிய பிரச்சனை, பூக்கள் உதிர்வுதான், அது பூ செடியாக இருந்தாலும் சரி அல்லது காய்கறி செடியாக இருந்தாலும் சரி. இந்த பிரச்சனையை சமாளிக்க மோர் பெருங்காய கரைச்சல் நல்ல நிவாரணியாக இருக்கும். மோர் பெருங்காய கரைச்சல் எப்படி தயாரிப்பது, இதன் பயன் என்ன? செடிகளில் இதை எவ்வாறு பயனிப்பது என்ற பல கேள்விகளுக்கு, இன்று நம் பதிலை அறிய உள்ளோம், வாருங்கள் பார்க்கலாம். இதற்கு நமக்கு தேவை புளிச்ச மோர், இந்த மோர் ஃபிரிட்ஜில் வைக்காமல், வெளியே வைத்து புளிக்க வைத்த மோராக இருத்தல் வேண்டும். சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை வெளியே வைத்து, இந்த மோரை புளிக்க வைத்தல் வேண்டும். அதன் பிறகு புளித்த, இந்த மோருடன் நீங்கள் 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் சேர்க்க வேண்டும். புளித்த இந்த மோருடன், நீங்கள் கட்டி பெருங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம். மோருடன் சேர்த்த பெருங்காயத்தை நன்கு கலக்க வேண்டும். இந்த மோரில், பெருங்காயத்தின் கட்டிகள் வீழாதவாறு கரைத்திட வேண்டும். அதன் பிறகு, இந்த கரைச்சலை அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உர வைத்திட வேண்டும் என்றார். இது ஒரு செலவில்லா பயிரூட்டி, என்பது குறிப்பிடதக்கது. பெருங்காயத்தை, தண்ணீரில் கலந்து தெளித்தலும் நன்மை பயக்கும். இருப்பினும், மோருடன் கரைத்து தெளிப்பதால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது. ஒரு லீட்டர் மோர் கரைச்சலை, பத்து லீட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும், முழுமையாக கரைந்ததா என்று உறுதி செய்துக்கொள்ளவும். பின்பு செடிகளில் உபயோகிக்கவும். இந்த கரைச்சலை மாதம் ஒரு முறை தயாரித்து உபயோகிக்கலாம் எனவே எல்லா காய்கறி செடிகளிலும் பூக்க ஆரம்பித்தவுடன், இந்த கரைச்சலை தெளித்து வரவும். ஏனேன்றால் எவ்வளவு பூ பூக்கிறதோ, அதை பொறுத்தே நமக்கு காய்கறி கிடைக்கும். எனவே பூவை காபாற்றுவது என்பது, காய்கறியை தக்க வைத்துக் கொள்வதாகும். வேர் பகுதியில் அரை லீட்டர் அளவு ஊற்றினால் போதும். மற்றும் பூக்கள் மீது தெளிக்க, ஒரு ஸ்பேரே போட்டலில் வடிக் கட்டிய கரைச்சலை எடுத்து பின்னர், அதன் மூலம் தெளித்தால் நல்ல பயன் பெறலாம். மோர் பெருங்காய கரைச்சலின் நன்மைகள்: இதனை செடிகள் மீது தெளிப்பதால், பூச்சி தாக்குதல் குறைக்கலாம் மற்றும் இதன் வாசனையால் பூச்சிகள், செடியில் தாக்காது. அதே நேரம் மோரில் இருக்கும் பேக்டீரியா செடிகளுக்கு, ஊட்டச்சத்தை வழங்கும். பெருங்காயம் இருப்பதால், பூச் செடிகளில், சீக்கிரம் பூ பூக்கவும், மேலும் பூத்த பூக்கள் உதிராமல் காக்கவும், இந்த கரைச்சல் உதவுகிறது இதை இந்த கரைச்சலை, வேர் பகுதியில் ஊற்றுவதால், வேர்கள் வலுப்பெறும் என்று கூறினார்.

 

செடிகள் வைத்திருப்போரின், பெரிய பிரச்சனை, பூக்கள் உதிர்வுதான், அது பூ செடியாக இருந்தாலும் சரி அல்லது காய்கறி செடியாக இருந்தாலும் சரி. இந்த பிரச்சனையை சமாளிக்க மோர் பெருங்காய கரைச்சல் நல்ல நிவாரணியாக இருக்கும். மோர் பெருங்காய கரைச்சல் எப்படி தயாரிப்பது, இதன் பயன் என்ன? செடிகளில் இதை எவ்வாறு பயனிப்பது என்ற பல கேள்விகளுக்கு, இன்று நம் பதிலை அறிய உள்ளோம், வாருங்கள் பார்க்கலாம்.

இதற்கு நமக்கு தேவை புளிச்ச மோர், இந்த மோர் ஃபிரிட்ஜில் வைக்காமல், வெளியே வைத்து புளிக்க வைத்த மோராக இருத்தல் வேண்டும். சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை வெளியே வைத்து, இந்த மோரை புளிக்க வைத்தல் வேண்டும். அதன் பிறகு புளித்த, இந்த மோருடன் நீங்கள் 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் சேர்க்க வேண்டும். புளித்த இந்த மோருடன், நீங்கள் கட்டி பெருங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.

மோருடன் சேர்த்த பெருங்காயத்தை நன்கு கலக்க வேண்டும். இந்த மோரில், பெருங்காயத்தின் கட்டிகள் வீழாதவாறு கரைத்திட வேண்டும். அதன் பிறகு, இந்த கரைச்சலை அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உர வைத்திட வேண்டும் என்றார்.

இது ஒரு செலவில்லா பயிரூட்டி, என்பது குறிப்பிடதக்கது. பெருங்காயத்தை, தண்ணீரில் கலந்து தெளித்தலும் நன்மை பயக்கும். இருப்பினும், மோருடன் கரைத்து தெளிப்பதால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு லீட்டர் மோர் கரைச்சலை, பத்து லீட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும், முழுமையாக கரைந்ததா என்று உறுதி செய்துக்கொள்ளவும். பின்பு செடிகளில் உபயோகிக்கவும். இந்த கரைச்சலை மாதம் ஒரு முறை தயாரித்து உபயோகிக்கலாம் எனவே

எல்லா காய்கறி செடிகளிலும் பூக்க ஆரம்பித்தவுடன், இந்த கரைச்சலை தெளித்து வரவும். ஏனேன்றால் எவ்வளவு பூ பூக்கிறதோ, அதை பொறுத்தே நமக்கு காய்கறி கிடைக்கும். எனவே பூவை காபாற்றுவது என்பது, காய்கறியை தக்க வைத்துக் கொள்வதாகும்.

வேர் பகுதியில் அரை லீட்டர் அளவு ஊற்றினால் போதும். மற்றும் பூக்கள் மீது தெளிக்க, ஒரு ஸ்பேரே போட்டலில் வடிக் கட்டிய கரைச்சலை எடுத்து பின்னர், அதன் மூலம் தெளித்தால் நல்ல பயன் பெறலாம்.

மோர் பெருங்காய கரைச்சலின் நன்மைகள்:
இதனை செடிகள் மீது தெளிப்பதால், பூச்சி தாக்குதல் குறைக்கலாம் மற்றும்

இதன் வாசனையால் பூச்சிகள், செடியில் தாக்காது.

அதே நேரம் மோரில் இருக்கும் பேக்டீரியா செடிகளுக்கு, ஊட்டச்சத்தை வழங்கும்.

பெருங்காயம் இருப்பதால், பூச் செடிகளில், சீக்கிரம் பூ பூக்கவும், மேலும் பூத்த பூக்கள் உதிராமல் காக்கவும், இந்த கரைச்சல் உதவுகிறது இதை

இந்த கரைச்சலை, வேர் பகுதியில் ஊற்றுவதால், வேர்கள் வலுப்பெறும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories