சென்னையில் மண்வாசனை கிராமிய திருவிழா!
நாள்: 24.4.22, நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: தக்கர்பாபா வித்யாலயா (நந்தனம் சிக்னல் அருகில்), 58, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017
பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை விற்பனை செய்வதுடன் அவற்றை மதிப்புக்கூட்டியும் விற்று வருபவர் மேனகா. சென்னை கோடம்பாக்கத்தில் செயல்படும் அவரது மண்வாசனை நிறுவனம் சார்பில் பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்களை சமைப்பது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார்.. இந்நிலையில் தொன்மைவாய்ந்த நமது தமிழர் உணவு பற்றி பெருவாரியான மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக கிராமிய திருவிழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த திருவிழாவில் இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் மற்றும் அவற்றை மதிப்புக்கூட்டி விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தின்பண்டங்கள், கம்பஞ்சோறு, கூழ் வகைகள், கேழ்வரகு அடை, பனை ஓலையில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், கறுப்பு கவுனி ஐஸ்கிரீம், பதநீர், நுங்கு, கருப்பட்டி மற்றும் பல்வேறு கிராமிய உணவுப்பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்படவுள்ளன. 1250-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், 200 நாட்டு ரக காய்கறிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மூலிகைகள் கண்காட்சிக்காக வைக்கப்படவுள்ளன.
நிகழ்ச்சியில் சிறப்பாக வளர்ந்துவரும் கிராமிய கலைஞரான விக்னேஷ் அவர்களின் சிறுவத்தியான் கிராமிய கலைக்குழு சார்பில் நையாண்டி மேளம், நாதஸ்வரம் முழங்க கிராமிய ஆடல் பாடல் நிகழ்வுகள், முளைப்பாரி, கும்மியாட்டம் போன்ற கலை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கோடை வெயில் கொளுத்தும் இந்தச் சூழலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நல்லதொரு நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறுங்கள். பாரம்பரியம் மீட்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.
அனுமதி இலவசம், அனைவரும் வாரீர்!
மேலும் விவரங்களுக்கு
98841 66772